பொது செய்தி

தமிழ்நாடு

துணை சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த கோரிக்கை

Added : அக் 05, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:ஆலாங்கொம்பில் உள்ள துணை சுகாதார நிலையத்தை, ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.காரமடை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜடையம்பாளையத்தில், ஊராட்சி தலைவர் பழனிசாமி தலைமையில், கிராம சபைக் கூட்டம் நடந்தது.ஊராட்சியில் விளையாட்டு திடல் அமைக்க வேண்டும். பழுதடைந்துள்ள தெரு விளக்குகளை சீரமைக்க வேண்டும். ஆலாங்கொம்பில் உள்ள துணை

மேட்டுப்பாளையம்:ஆலாங்கொம்பில் உள்ள துணை சுகாதார நிலையத்தை, ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.காரமடை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜடையம்பாளையத்தில், ஊராட்சி தலைவர் பழனிசாமி தலைமையில், கிராம சபைக் கூட்டம் நடந்தது.ஊராட்சியில் விளையாட்டு திடல் அமைக்க வேண்டும். பழுதடைந்துள்ள தெரு விளக்குகளை சீரமைக்க வேண்டும். ஆலாங்கொம்பில் உள்ள துணை சுகாதார நிலையத்தை, ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்த வேண்டும். பகுதிநேர கால்நடை மருந்தகம் அமைக்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை, பொதுமக்கள் கூறினர்.கூட்டத்தில் மின்வாரியம் சம்பந்தமான புகார்களுக்கு விளக்கம் கூற, மின்வாரிய அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு புகார் அனுப்ப, தீர்மானிக்கப்பட்டது.கூட்டத்தில் தாசில்தார் ஷர்மிளா, ஊராட்சி துணைத்தலைவர் மாரண்ணன், வட்டார கல்வி அலுவலர் ரமேஷ்பாபு, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, ஒன்றிய கவுன்சிலர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X