பொது செய்தி

தமிழ்நாடு

இயற்கை முறையில் உற்பத்தி செய்த தென்னை பாக்குக்கு அங்கக சான்று

Added : அக் 05, 2021
Share
Advertisement
கோவை:பேரூர் வட்டத்துக்கு உட்பட்ட பகுதியில், தென்னை, பாக்கு, மஞ்சள், கோகோ, மா, பலா உள்ளிட்ட மரப்பயிர்களை பலர், இயற்கை முறையில் உற்பத்தி செய்து வருகின்றனர். இந்த முறையில் சாகுபடி செய்யும் வேளாண் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய, தமிழக அரசு அங்கக சான்று துறையில் சான்று பெறுவது அவசியம்.அங்கக சான்று உதவி இயக்குனர் வானதி கூறியதாவது:அங்கக சான்று பெற, விவசாயிகள் முறையான
 இயற்கை முறையில் உற்பத்தி செய்த  தென்னை பாக்குக்கு அங்கக சான்று

கோவை:பேரூர் வட்டத்துக்கு உட்பட்ட பகுதியில், தென்னை, பாக்கு, மஞ்சள், கோகோ, மா, பலா உள்ளிட்ட மரப்பயிர்களை பலர், இயற்கை முறையில் உற்பத்தி செய்து வருகின்றனர். இந்த முறையில் சாகுபடி செய்யும் வேளாண் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய, தமிழக அரசு அங்கக சான்று துறையில் சான்று பெறுவது அவசியம்.

அங்கக சான்று உதவி இயக்குனர் வானதி கூறியதாவது:அங்கக சான்று பெற, விவசாயிகள் முறையான விதிமுறைகளை கடைப்பிடித்து, வேளாண் பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும். குறிப்பாக உரம், பயிர் பாதுகாப்பு மற்றும் வியாபார மேலாண்மை ஆகியவற்றை கடைப்பிடித்து பயிர் செய்த விவசாயிகளுக்கு மட்டுமே, அங்கக சான்று வழங்கப்படுகிறது.சிலர் சான்று பெறாமல் இயற்கை விவசாயம் என்ற பெயரில் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். அது முறையல்ல.தடாகம் ரோட்டில் உள்ள விதை சான்று மற்றும் அங்கக சான்று அலுவலகத்தில், நேரடியாக அல்லது ஆன்லைன் வழியாக முறையாக விண்ணப்பித்து, சான்று பெற வேண்டும்.இந்த பகுதியில் உள்ள பல விவசாயிகளுக்கு, தேங்காய், பாக்கு உள்ளிட்ட பல வேளாண் பொருட்களுக்கு அங்கக சான்று வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X