பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவால் பரீட்சை எழுதாமலே பட்டதாரி ஆசிரியர்களுக்கு வயசு போச்சு: வயது வரம்பு அரசாணையை நீக்க கோரிக்கை

Added : அக் 05, 2021
Share
Advertisement
கோவை:ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்ட, போட்டித்தேர்வில் பங்கேற்க, வயது வரம்பு அரசாணையை நீக்கி, அறிவிப்பு வெளியிட வேண்டுமென்ற, கோரிக்கை வலுத்துள்ளது.அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள, 2 ஆயிரத்து 207 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு, தற்போது போட்டித்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.இதில், கடந்த ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட, வயது வரம்பு அரசாணை

கோவை:ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்ட, போட்டித்தேர்வில் பங்கேற்க, வயது வரம்பு அரசாணையை நீக்கி, அறிவிப்பு வெளியிட வேண்டுமென்ற, கோரிக்கை வலுத்துள்ளது.அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள, 2 ஆயிரத்து 207 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு, தற்போது போட்டித்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.இதில், கடந்த ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட, வயது வரம்பு அரசாணை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அரசாணைப்படி பொது பிரிவினர், 40 வயதுக்கும், சிறப்பு பிரிவினர், 45 வயதுக்குட்பட்டும், இருப்பது அவசியம்.கொரோனா தொற்று காரணமாக, ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு, தற்போதுதான் போட்டித்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டித்தேர்வுக்கு தயாராகியுள்ள சிலருக்கு, வயது அதிகரித்துள்ளதால், அரசாணையை ரத்து செய்ய வேண்டுமென, போராடி வருகின்றனர்.இந்நிலையில், தேர்தல் வாக்குறுதியில் முதல்வர் அறிவித்தபடி, அரசாணையை ரத்து செய்த பிறகு, தேர்வு நடத்த வேண்டுமென்ற, கோரிக்கை வலுத்து வருகிறது.அரசு வேலைவாய்ப்பினை எதிர்நோக்கியிருக்கும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க பொறுப்பாளர் ரத்தினவதி கூறுகையில், ''தேர்தல் சமயத்தில், வயது வரம்பு அரசாணை ரத்து செய்யப்படும் என, முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்தார். ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அறிவிக்கப்பட்ட தேர்வில், வயது வரம்பு அரசாணை குறிப்பிடப்பட்டுள்ளது.எனக்கு 2 மாதங்களே கூடுதலாக உள்ள நிலையில், இத்தேர்வுக்கு பல ஆண்டுகளாக தயாராகியும், பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. என்னை போல, மாநிலம் முழுக்க, ஆயிரக்கணக்கான தேர்வர்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். அரசாணையை ரத்து செய்தால் தான், இத்தேர்வில் பங்கேற்க இயலும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X