மாவட்ட பாட்மின்டன் போட்டி: திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

Added : அக் 05, 2021
Share
Advertisement
கோவை:மாவட்ட அளவிலான பாட்மின்டன் போட்டியில் வீரர், வீராங்கனைகள் தங்களின் முழு திறமையையும் வெளிப்படுத்தி அசத்தினர்.வி.ஜெ.ஈவன்ட்ஸ் சார்பில், முதலாம் ஆண்டு மாவட்ட அளவிலான பாட்மின்டன் போட்டி சின்னவேடம்பட்டி, கே.எஸ்.ஐ.ஆர்.எஸ்., பள்ளி வளாகத்தில் நடந்தது.வீரர், வீராங்கனைகளுக்கான, 11, 13, 15, 17, 19 ஒற்றையர் பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. இதில், 80க்கும் மேற்பட்டோர்

கோவை:மாவட்ட அளவிலான பாட்மின்டன் போட்டியில் வீரர், வீராங்கனைகள் தங்களின் முழு திறமையையும் வெளிப்படுத்தி அசத்தினர்.வி.ஜெ.ஈவன்ட்ஸ் சார்பில், முதலாம் ஆண்டு மாவட்ட அளவிலான பாட்மின்டன் போட்டி சின்னவேடம்பட்டி, கே.எஸ்.ஐ.ஆர்.எஸ்., பள்ளி வளாகத்தில் நடந்தது.வீரர், வீராங்கனைகளுக்கான, 11, 13, 15, 17, 19 ஒற்றையர் பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. இதில், 80க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.மாணவர்களுக்கான 11 வயது பிரிவு இறுதிப்போட்டியில், முகிலன், 2-1 என்ற செட் கணக்கில், ஹரிகுமாரையும்; மாணவிகளுக்கான 11 வயது பிரிவு இறுதிப்போட்டியில், ஹர்ஷா, 2-1 என்ற செட் கணக்கில், சுவேதாவையும் வென்றனர்.மாணவர்களுக்கான 13 வயது பிரிவு இறுதிப்போட்டியில், சிவசரண், 2-0 என்ற செட் கணக்கில், ரோஷனையும்; மாணவிகளுக்கான இறுதிப்போட்டியில் காயத்ரி, 2-0 என்ற செட் கணக்கில், ஹர்ஷனாவையும் வென்றனர்.மாணவர்களுக்கான, 15 வயது பிரிவு இறுதிப்போட்டியில், சச்சின், 2-0 என்ற செட் கணக்கில், சிவசரணையும்; மாணவிகளுக்கான இறுதிப்போட்டியில், ஏஞ்சிலின், 2-0 என்ற செட் கணக்கில், கவினிதாவையும் வென்றனர்.மாணவர்களுக்கான, 17 வயது பிரிவு இறுதிப்போட்டியில், விஷ்ணு, 2-1 என்ற செட் கணக்கில், கவிந்திரனையும்; மாணவிகளுக்கான இறுதிப்போட்டியில், ஏஞ்சிலின், 2-0 என்ற செட் கணக்கில், கவினிதாவையும் வென்றனர்.மாணவர்களுக்கான, 19 வயது பிரிவு இறுதிப்போட்டியில், தரணீந்திரா, 2-0 என்ற செட் கணக்கில், பூபேஷ்யையும்; மாணவிகளுக்கான இறுதிப்போட்டியில், நிஷிந்தா, 2-1 என்ற செட் கணக்கில், லக் ஷன்யாவையும் வென்றனர். போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பைகள், சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X