டிராக் போர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்: ஐவர் கால்பந்து போட்டியில் 'டாப்'

Added : அக் 05, 2021
Share
Advertisement
கோவை:மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டியில், ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய,டிராக் போர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி முதலிடம் பிடித்தது.கோவை, 'டிரீம் லைட்ஸ் ஸ்போர்ட்ஸ்' நிறுவனம் சார்பில், மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி சரவணம்பட்டி, 'ஏஸ்ட்ரோ செயற்கை புல்வெளி' தளத்தில் நடந்தது.வீரர்களுக்கான, 17, 19 மற்றும் ஓபன் வயது பிரிவுகளில் போட்டி நடந்தது. இப்போட்டியில், கோவை,

கோவை:மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டியில், ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய,டிராக் போர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி முதலிடம் பிடித்தது.கோவை, 'டிரீம் லைட்ஸ் ஸ்போர்ட்ஸ்' நிறுவனம் சார்பில், மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி சரவணம்பட்டி, 'ஏஸ்ட்ரோ செயற்கை புல்வெளி' தளத்தில் நடந்தது.வீரர்களுக்கான, 17, 19 மற்றும் ஓபன் வயது பிரிவுகளில் போட்டி நடந்தது. இப்போட்டியில், கோவை, சேலம், கரூர், ஈரோடு, திருப்பூர், ஊட்டி, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, 50க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.19 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான இறுதிப்போட்டியில், டிராக் போர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி, 2-0 என்ற கோல் கணக்கில், நோவாஸ் அணியை வென்றது.ஓபன் பிரிவினருக்கான இறுதிப்போட்டியில், இ.எம்.ஜி.எஸ்., அணி, ஜெ.சி.டி., கல்லுாரி அணிகள் மோதின. ஆட்ட நேர முடிவில், கோல் எதுவும் அடிக்காமல் ஆட்டம் டிராவில் முடிந்தது.பின்னர், 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் இ.எம்.ஜி.எஸ்., அணி, 3-2 என்ற கோல் கணக்கில், ஜெ.சி.டி., கல்லுாரி அணியை வென்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள், ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X