பொது செய்தி

தமிழ்நாடு

பழங்குடியின வேட்பாளர்களை கைவிட்ட கட்சிகள்:

Added : அக் 05, 2021
Share
Advertisement
திருக்கழுக்குன்றம் ஒன்றியம் சூராடிமங்கலம் ஊராட்சியில் 50க்கும் மேற்பட்ட இருளர் பழங்குடியினர் வசிக்கின்றனர்.இதன் ஊராட்சி தலைவர் பதவி, இட ஒதுக்கீடு சுழற்சி முறையில் பழங்குடியின் பெண் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டது.பண பலம் படைத்த நபர்களே போட்டியிடும் நிலையில், கூலி தொழிலாளரான இருளர் பழங்குடியினர், தேர்தல் போட்டியை நினைத்தே பார்க்க முடியாது.இப்படிப்பட்ட நிலையில், இட

திருக்கழுக்குன்றம் ஒன்றியம் சூராடிமங்கலம் ஊராட்சியில் 50க்கும் மேற்பட்ட இருளர் பழங்குடியினர் வசிக்கின்றனர்.

இதன் ஊராட்சி தலைவர் பதவி, இட ஒதுக்கீடு சுழற்சி முறையில் பழங்குடியின் பெண் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டது.பண பலம் படைத்த நபர்களே போட்டியிடும் நிலையில், கூலி தொழிலாளரான இருளர் பழங்குடியினர், தேர்தல் போட்டியை நினைத்தே பார்க்க முடியாது.இப்படிப்பட்ட நிலையில், இட ஒதுக்கீடு மூலம் தனித்து நிற்கும் வாய்ப்பு பெற்ற இருளர்களை, தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சியினர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வைத்துள்ளனர்.

தி.மு.க., சாவித்திரியை, அ.தி.மு.க.,வில் விஜயாவை, தே.மு.தி.க., தேவியை வேட்பாளராக நிறுத்தி உள்ளன.ஆனால் தினப்படி வருவாயை நம்பியுள்ள அவர்களை தேர்தலில் இழுத்துவிட்ட கட்சிகள், தேர்தல் செலவுகளுக்கு பணம் எதுவும் தரவில்லை.சேமிப்பில் இருந்த சொற்ப ரூபாய், நகைகளை அடகு வைத்து கிடைத்த பணத்தில் துண்டு பிரசுரம், 'போஸ்டர்' அடித்து பிரசாரம் செய்து வருகின்றனர்.

இதில் விஜயாவின் கணவர் முத்து, ஏற்கனவே இரு முறை வார்டு உறுப்பினராக இருந்துள்ளதால், தற்போது மனைவியை நிறுத்தியுள்ள அவர், கட்சியினர் உதவியுடன் மற்றவர்களை போட்டியிடக் கூடாது என தடுத்து வருகிறார்.தி.மு.க.,வோ, போட்டியிடாவிட்டால் தலைமை கேள்வியெழுப்பும் என்ற அச்சத்தில், வேட்பாளரை நிறுத்தி உள்ளது. தே.மு.தி.க.,வும் தன் பங்குக்கு ஒருவரை நிறுத்தியுள்ளது.கட்சி பெயருக்காக போட்டியிட வைத்துள்ள கட்சிகள், அவர்களை கண்டு கொள்ளாமல் கைவிட்டுள்ளது, அவர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X