பொது செய்தி

தமிழ்நாடு

சொத்து வரி பாக்கியா...வருகிறது நோட்டீஸ்!

Added : அக் 05, 2021
Share
Advertisement
கோவை:''ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வரி நிலுவை வைத்திருப்போருக்கு நோட்டீஸ் வழங்கப்படுகிறது,'' என, கோவை மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் தெரிவித்தார்.கோவை மாநகராட்சியில், 5.45 லட்சம் வரி விதிப்புதாரர்கள் உள்ளனர். ஆறு மாதத்துக்கு ஒருமுறை சொத்து வரி செலுத்த வேண்டும். வரி நிர்ணயம் செய்தது தொடர்பாக, ஆட்சேபணை தெரிவித்து, 467 வரி விதிப்புதாரர்கள், கோர்ட்டில் வழக்கு

கோவை:''ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வரி நிலுவை வைத்திருப்போருக்கு நோட்டீஸ் வழங்கப்படுகிறது,'' என, கோவை மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் தெரிவித்தார்.கோவை மாநகராட்சியில், 5.45 லட்சம் வரி விதிப்புதாரர்கள் உள்ளனர். ஆறு மாதத்துக்கு ஒருமுறை சொத்து வரி செலுத்த வேண்டும். வரி நிர்ணயம் செய்தது தொடர்பாக, ஆட்சேபணை தெரிவித்து, 467 வரி விதிப்புதாரர்கள், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கின்றனர். இவ்விசாரணை நிலுவையில் இருப்பதால், ரூ.58.50 கோடி வசூலிக்கப்படாமல் நிலுவையில் இருக்கிறது.இதில், கடந்த, 2011 ஜன., முதல், 2021 தற்போது வரை, ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வரி செலுத்தாமல் இருக்கும், 100 பேர் பட்டியல், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர் ஒருவர் கேட்டிருந்தார்.அப்போது, உதவி கமிஷனராக இருந்த (வருவாய்) அண்ணாதுரை, தகவல் வழங்கால் கிடப்பில் போட்டு விட்டார். மேல்முறையீட்டு அலுவலரான, மாநகராட்சி துணை கமிஷனர் ஷர்மிளாவுக்கு மீண்டும் விண்ணப்பித்தனர்.அதை பரிசீலித்த துணை கமிஷனர், ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வரி நிலுவை வைத்துள்ள, 17 வரி விதிப்புதாரர்கள் பட்டியலை வழங்கியுள்ளார். இதன் மூலம், ரூ.42.30 கோடி வசூலாகாமல் இருப்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.இதில், கோவை அரசு மருத்துவ கல்லுாரி மட்டும் ரூ.2.93 கோடி, இ.எஸ்.ஐ., மருத்துவமனை ரூ.3.53 கோடி சொத்து வரி செலுத்த வேண்டும். 5 வரி விதிப்புதாரர்கள், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கின்றனர். 4 வரி விதிப்புதாரர்கள் தொடர்ந்த வழக்கில், மாநகராட்சிக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தும் இன்னும் நிலுவை வரி வசூலிக்கப்படாமல் இருக்கிறது.வரி செலுத்தாவிட்டால் நடவடிக்கை: கமிஷனர்மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் கூறுகையில், ''மாநகராட்சி நிதி நிலைமை பற்றாக்குறையாகத்தான் இருக்கிறது. வரியில்லாத இனங்கள் வசூலிக்கும் பணி துரிதப்பட்டிருப்பதால், அவ்வகையில் வருவாய் அதிகரித்து வருகிறது. ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வரி நிலுவை வைத்திருப்போருக்கு நோட்டீஸ் வழங்குகிறோம். அதன் பிறகும், வரி செலுத்தாவிட்டால், அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X