குப்பைத்தொட்டி இல்லை; கழிவுகளால் தொல்லை!

Added : அக் 05, 2021
Share
Advertisement
சுண்டக்காமுத்துாரில் சுகாதார சீர்க்கேட்டால் அவதிவிளக்கு எரிவதில்லைமாநகராட்சி, 97வது வார்டுக்கு உட்பட்ட, சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 1 விரிவாக்கத்தில் உள்ள, மின் கம்பத்தில், கடந்த சில மாதங்களாக, விளக்கு எரிவதில்லை. பலமுறை மின் வாரியத்தில் புகார் கொடுத்தும் பலனில்லை.- ஆர்த்தி, ஹவுசிங் யூனிட் பேஸ் 1.சாஸ்திரி நகரில் சுகாதார

சுண்டக்காமுத்துாரில் சுகாதார சீர்க்கேட்டால் அவதி

விளக்கு எரிவதில்லைமாநகராட்சி, 97வது வார்டுக்கு உட்பட்ட, சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 1 விரிவாக்கத்தில் உள்ள, மின் கம்பத்தில், கடந்த சில மாதங்களாக, விளக்கு எரிவதில்லை. பலமுறை மின் வாரியத்தில் புகார் கொடுத்தும் பலனில்லை.- ஆர்த்தி, ஹவுசிங் யூனிட் பேஸ் 1.

சாஸ்திரி நகரில் சுகாதார சீர்கேடுஒண்டிப்புதுார், நெசவாளர் காலனி, சாஸ்திரி நகரில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- நித்யா, சாஸ்திரி நகர்.

சாக்கடை கால்வாயை துார்வாரணும்செல்வபுரம், தில்லை நகர், சரோஜினி நகர் மூன்றாவது வீதியில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் தேங்கியுள்ளது.- கோவிந்தராஜ், தில்லை நகர்.

குப்பை தொட்டி வைக்கணும்கோவைபுதுார் - பேரூர் ரோடு, சுண்டக்காமுத்துாரில், குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அருகில், குப்பைத்தொட்டி இல்லாததால், குப்பை சாலையில் குவிக்கப்படுகிறது. காற்றில் பறக்கும் குப்பை, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது.- நாசர்தீன், குனியமுத்துார்.

அப்பு லே-அவுட்டில் கழிவு நீர் தேக்கம்மாநகராட்சி, 99வது வார்டுக்கு உட்பட்ட, செட்டிபாளையம் ரோடு, அப்பு லே-அவுட்டில், சாக்கடை கால்வாயில் மண் விழுந்து, அடைப்பு ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கியுள்ளது.- முத்து, அப்பு லே-அவுட்.

திருவள்ளுவர் நகரில் வெளிச்சமில்லைமாநகராட்சி, 95வது வார்டுக்கு உட்பட்ட, போத்தனுார் ரோடு, திருவள்ளுவர் நகரில் உள்ள, மின் கம்பத்தில் (எண்: 2) கடந்த மூன்று மாதத்துக்கும் மேலாக, விளக்கு எரிவதில்லை. இப்பகுதி இருளில் மூழ்கியுள்ளது.-நரேஷ், போத்தனுார்.

சாலையை செப்பனிடணும்பெரியநாயக்கன்பாளையம், குருடம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட, பழனிகவுண்டன் புதுார், பிரியங்கா நகரில், சாலை வசதி இல்லாததால், மழை நேரங்களில், சாலை முழுவதும் குளம் போல் நீர் தேங்குகிறது. இப்பகுதி மக்கள் நடந்து செல்ல வழியின்றி அவதிப்படுகின்றனர். இப்பகுதியில், சாலையை செப்பனிட வேண்டும்.- சதீஷ், பிரியங்கா நகர்.

வசந்தாமில் ரோட்டில் கழிவுநீர் குட்டைமாநகராட்சி, 59வது வார்டுக்கு உட்பட்ட, வசந்தா மில் - நீலிக்கோணாம்பாளையம் ரோட்டில் உள்ள, சுந்தரம் லே - அவுட், சின்ன குருசாமி லே-அவுட் வீதியில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் தேங்கியுள்ளது. துர்நாற்றம் வீசுகிறது; சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இக்கால்வாயை துார்வார வேண்டும்.- கிருஷ்ணன், சிங்காநல்லுார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X