பொது செய்தி

தமிழ்நாடு

மூளை ரத்தக்குழாயில் ரத்தக்கட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை

Added : அக் 05, 2021
Share
Advertisement
கோவை:மூளை ரத்தக்குழாயில் ஏற்படும் ரத்தக்கட்டிகளை அகற்ற, நவீன தொழில்நுட்பமான 'திராம்போக்டமி' கோவை அரசு மருத்துவமனையில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.உலகம் முழுவதிலும் ஏற்படும் நோய் காரண உயிரிழப்புகளில், பக்கவாத நோய் முன்னணியில் உள்ளது. நடப்பாண்டு 1.45 கோடி மக்கள் பக்கவாதம் நோயால் பாதிக்கப்படுவார்கள் என, ஆய்வு ஒன்று கூறுகிறது.பக்கவாத அறிகுறிகள் ஏற்பட்டவுடன்,

கோவை:மூளை ரத்தக்குழாயில் ஏற்படும் ரத்தக்கட்டிகளை அகற்ற, நவீன தொழில்நுட்பமான 'திராம்போக்டமி' கோவை அரசு மருத்துவமனையில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.உலகம் முழுவதிலும் ஏற்படும் நோய் காரண உயிரிழப்புகளில், பக்கவாத நோய் முன்னணியில் உள்ளது. நடப்பாண்டு 1.45 கோடி மக்கள் பக்கவாதம் நோயால் பாதிக்கப்படுவார்கள் என, ஆய்வு ஒன்று கூறுகிறது.பக்கவாத அறிகுறிகள் ஏற்பட்டவுடன், நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து வந்தால், அவர்களை காப்பாற்ற முடியும் என்கிறது மருத்துவத் துறை.மூளைக்கு செல்லும், ரத்தக்குழாய்களில் ரத்தக்கட்டிகள் ஏற்படுவதால் பக்கவாதம் ஏற்படுகிறது. பக்கவாதத்தின் அறிகுறிகளான, முகம் அல்லது உடலில் ஒரு பக்கம் மரத்து போதல், பேசும்போது வார்த்தைகள் குழறுதல், நடக்கும் போது தள்ளாடுதல் உள்ளிட்டவை ஏற்பட்டவுடன், கொண்டு வரப்படும் நோயாளிகளை, திராம்போக்டமி மூலம் இயல்பு நிலைக்கு மீட்டெடுக்கலாம்.மூளை நரம்பில் ரத்தக்கட்டியால் ஏற்படும் அடைப்பை சரிசெய்ய, எளிதில் வளையக்கூடிய குழாய் ரத்தக்குழாய்க்குள் செலுத்தப்பட்டு, ரத்தக்கட்டி உறிஞ்சப்படும்.இதன் மூலம் ரத்த ஓட்டம் சீரடைந்து, பக்கவாத நோயாளி இயல்பு நிலைக்கு திரும்ப முடியும். கோவை அரசு மருத்துவமனையில், இந்நடைமுறை மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில், ''ஆரம்ப கட்டத்தில் வரும் பக்கவாத நோயாளிகளுக்கு இச்சிகிச்சை மூலம், தீர்வு கிடைக்கும். மருத்துவமனையில் இந்நடைமுறையின் கீழ், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இதற்கான நடைமுறைகள் துவங்கியுள்ளன. மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள, 'பைப்லேன்' கேத் லேப் மூலம் இச்சிகிச்சை சாத்தியமாகியுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X