பொது செய்தி

தமிழ்நாடு

மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு உருவாக்க மாநகராட்சி திட்டம்

Added : அக் 05, 2021
Share
Advertisement
கோவை:கோவையில் தேவையான இடங்களில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்த, மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது.கோவையில் இரண்டாவது வாரத்தில் இருந்து வடகிழக்கு பருவ மழை பெய்யத் துவங்குமென, வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.நகர்ப்பகுதியில் மழை நீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து, அடைப்புகளை நீக்கும் பணியை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள, உள்ளாட்சி

கோவை:கோவையில் தேவையான இடங்களில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்த, மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது.கோவையில் இரண்டாவது வாரத்தில் இருந்து வடகிழக்கு பருவ மழை பெய்யத் துவங்குமென, வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.நகர்ப்பகுதியில் மழை நீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து, அடைப்புகளை நீக்கும் பணியை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள, உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியது. அதன்படி, மழை நீர் வடிகால் துார்வாரும் பணியை மாநகராட்சி மேற்கொள்கிறது.இச்சூழலில், மழை நீர் சேகரிப்பு வாரம் கொண்டாட, தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை உத்தரவிட்டிருக்கிறது. என்னென்ன பணிகள் மேற்கொள்வதென, பொறியியல் பிரிவினருடன், மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் ஆலோசித்து வருகிறார்.கமிஷனர் கூறுகையில், ''கோவை நகர் பகுதியில், 400 இடங்களில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு பல்வேறு நிறுவனங்களால் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக சொல்கின்றனர். அவற்றின் தற்போதைய நிலை எப்படியிருக்கிறது என ஆய்வு செய்ய வேண்டும். வேறென்ன பணிகள் செய்வதென, ஆலோசித்து வருகிறோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X