நொய்டா இரட்டை கோபுர வழக்குக்கு எதிரான மனு : உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

Updated : அக் 05, 2021 | Added : அக் 05, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி-நொய்டாவில் விதிமீறி கட்டப்பட்டுவரும் இரட்டை கோபுரங்களை தகர்க்க பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தனியார் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துஉள்ளது.உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் 'சூப்பர்டெக் லிமிடட்' என்ற ஒரு தனியார் நிறுவனம் 40 அடுக்கு மாடிகளுடன் இரட்டை கோபுரங்களை கட்டி வருகிறது. இந்த கட்டுமானம் கட்டட விதிமுறைகளை மீறி

புதுடில்லி-நொய்டாவில் விதிமீறி கட்டப்பட்டுவரும் இரட்டை கோபுரங்களை தகர்க்க பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தனியார் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துஉள்ளது.



latest tamil news


உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் 'சூப்பர்டெக் லிமிடட்' என்ற ஒரு தனியார் நிறுவனம் 40 அடுக்கு மாடிகளுடன் இரட்டை கோபுரங்களை கட்டி வருகிறது. இந்த கட்டுமானம் கட்டட விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளது தெரியவந்தது.வெடிபொருள்இந்த வழக்கை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம், அந்த கட்டடங்களை தகர்க்க சமீபத்தில் உத்தரவிட்டது. பின், உச்ச நீதிமன்றத்தின் அந்த தீர்ப்பில் சில மாற்றங்களை செய்து புதிய உத்தரவை பிறப்பிக்க, சூப்பர்டெக் நிறுவனம் சார்பில், மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:இந்த இரட்டை கோபுரங்களுக்கு அருகே பல்வேறு கட்டடங்கள் இருப்பதால், இதை வெடிபொருள் பயன்படுத்தி தகர்க்க முடியாது.கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு செங்கலாக தான் உடைக்கப்பட வேண்டும். இப்படி செய்தால், பல கோடி ரூபாய் மதிப்பிலான மூலப் பொருட்கள் வீணாகாது. கட்டட விதிமுறைகளுக்கு இணங்கும் விதமாக, இதில் ஒரு கோபுரத்தில் உள்ள, 224 வீடுகளை மட்டும் இடிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.


latest tamil news


அதன்படி, முன்பு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மாற்றி, வேறு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.விசாரணைஇந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் நாகரத்னா அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. தனியார் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
05-அக்-202118:46:39 IST Report Abuse
 Muruga Vel கட்டும்போது வேடிக்கை பாக்கறது மும்பை ஆதர்ஷ் பில்டிங்கிலும் நடந்தது
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
05-அக்-202106:47:20 IST Report Abuse
Natarajan Ramanathan இரண்டு கோபுரங்களும் அருகருகே இருப்பதுதான் பிரச்சினை என்றால் அதில் ஒன்றை மட்டும் இடிக்க உத்தரவிடலாமே இரண்டையும் இடிப்பது தேவையற்றது....
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
05-அக்-202101:22:44 IST Report Abuse
தமிழவேல் விதிமுறைகளை மீறியது மட்டுமல்லாமல் ஊழலும் பெரிய அளவில், பெரிய மனிதர்களுக்கு சாதகமாக நடந்துள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X