பொது செய்தி

தமிழ்நாடு

கிராம சபை தீர்மானத்தில் 'தில்லாலங்கடி?'

Added : அக் 05, 2021
Share
Advertisement
ஆர்.கே.பேட்டை : கிராம சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை, நோட்டு புத்தகத்தில் இருந்து, ஊராட்சி நிர்வாகம் நீக்கி விட்டதாக கூறி பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.ஆர்.கே.பேட்டை ஒன்றியம், அம்மனேரி ஊராட்சியில், கடந்த 2ம் தேதி நடந்த கிராம சபையில், ஊராட்சியின் வளர்ச்சி திட்டம் குறித்த பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் முன் வைத்தனர்.அந்த தீர்மானங்கள் அடங்கிய
 கிராம சபை தீர்மானத்தில் 'தில்லாலங்கடி?'

ஆர்.கே.பேட்டை : கிராம சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை, நோட்டு புத்தகத்தில் இருந்து, ஊராட்சி நிர்வாகம் நீக்கி விட்டதாக கூறி பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆர்.கே.பேட்டை ஒன்றியம், அம்மனேரி ஊராட்சியில், கடந்த 2ம் தேதி நடந்த கிராம சபையில், ஊராட்சியின் வளர்ச்சி திட்டம் குறித்த பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் முன் வைத்தனர்.அந்த தீர்மானங்கள் அடங்கிய பக்கங்களை நோட்டு புத்தகத்தில் இருந்து, ஊராட்சி நிர்வாகம் நீக்கி விட்டதாகவும், புதிதாக தீர்மானங்களை பதிவு செய்துள்ளதாகவும், அம்மனேரி ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுப்பிஉள்ளனர்.இதை கண்டித்து, நேற்று காலை, திருத்தணி - ஆர்.கே.பேட்டை நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

200க்கும் மேற்பட்ட பொதுமக்கள், அம்மனேரி கூட்டு சாலையில் நடந்த மறியலில் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து, கோஷம் எழுப்பினர்.உடனடியாக, ஆர்.கே.பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி மற்றும் திருத்தணி எம்.எல்.ஏ., சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர். மறியல் காரணமாக, இந்த மார்க்கத்தில், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X