சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊராட்சி அலுவலகத்தில் இருந்து வெளியேற மறுத்த நபரால் பரபரப்பு

Added : அக் 05, 2021
Share
Advertisement
தொண்டாமுத்தூர்:தேவராயபுரம் ஊராட்சி அலுவலகத்தில் நுழைந்த வாலிபர், அலுவலகத்தை விட்டு வெளியேற மறுத்ததால், பரபரப்பு ஏற்பட்டது.தேவராயபுரம், கன்னிமார் கோவில் வீதியை சேர்ந்தவர் கார்த்திக், 28. தி.மு.க.,வில் உறுப்பினராக உள்ளார். இவர், தேவராயபுரம் ஊராட்சி அலுவலகத்திற்கு நேற்று மாலை, 3:00 மணிக்கு வந்துள்ளார்.கிராமசபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகல் தர வேண்டும்,

தொண்டாமுத்தூர்:தேவராயபுரம் ஊராட்சி அலுவலகத்தில் நுழைந்த வாலிபர், அலுவலகத்தை விட்டு வெளியேற மறுத்ததால், பரபரப்பு ஏற்பட்டது.தேவராயபுரம், கன்னிமார் கோவில் வீதியை சேர்ந்தவர் கார்த்திக், 28. தி.மு.க.,வில் உறுப்பினராக உள்ளார். இவர், தேவராயபுரம் ஊராட்சி அலுவலகத்திற்கு நேற்று மாலை, 3:00 மணிக்கு வந்துள்ளார்.கிராமசபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகல் தர வேண்டும், தன்னை ஊராட்சி அலுவலகத்திற்குள் நுழையாமல் தடுக்கும், ஊராட்சி தலைவரின் கணவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி, மாலை, 5:00 மணி வரை, அலுவலகத்தை விட்டு வெளியேறாமல் இருந்தார்.அச்சமயம், ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி தலைவர் தனமணி மற்றும் பெண் பணியாளர்கள் மட்டும் இருந்தனர். இதனால் உடனடியாக, வார்டு கவுன்சிலர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.வார்டு கவுன்சிலர்கள் பேச்சு நடத்தியும், கார்த்திக் ஊராட்சி அலுவலகத்தை விட்டு வெளியேறாததால், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.தொண்டாமுத்தூர் எஸ்.ஐ., பழனியாண்டி, கார்த்திக்குடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஊராட்சி அலுவலகத்திற்குள் தன்னை நுழைய விடாமல் தடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஊராட்சி தலைவரிடம் புகார் அளித்தார். அதன்பின், அலுவலகத்தை விட்டு வெளியேறினார்.தேவராயபுரம் ஊராட்சி தலைவர் தனமணி கூறுகையில், "கார்த்திக் என்பவர், கிராமசபை கூட்ட தீர்மானங்களின் நகல் கேட்டார். அரசு அலுவலகத்தில் உள்ள ஆவணம் என்பதால், முறையாக தகவல் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பெறலாம் என தெரிவித்தேன். அதை அவர் ஏற்கவில்லை. அவர் அளித்த புகார் குறித்து விசாரித்து, நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X