பசுந்தேயிலைக்கு ரூ.14.74 விலை நிர்ணயம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பசுந்தேயிலைக்கு ரூ.14.74 விலை நிர்ணயம்

Added : அக் 05, 2021
Share
குன்னுார்:நடப்பு மாதத்திற்கான பசுந்தேயிலைக்கு, 14.74 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.குன்னுாரில் உள்ள,தேயிலை வாரிய உதவி இயக்குனர் ஹரிபிரகாஷ் வெளியிட்ட செய்தி குறிப்பு:சிறு தேயிலை தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் தேயிலை தூள் ஏலத்தின் அடிப்படையில், கடந்த, 2015ல் இருந்து பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.கடந்த செப்., மாத ஏல அடிப்படையில்,

குன்னுார்:நடப்பு மாதத்திற்கான பசுந்தேயிலைக்கு, 14.74 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.குன்னுாரில் உள்ள,தேயிலை வாரிய உதவி இயக்குனர் ஹரிபிரகாஷ் வெளியிட்ட செய்தி குறிப்பு:சிறு தேயிலை தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் தேயிலை தூள் ஏலத்தின் அடிப்படையில், கடந்த, 2015ல் இருந்து பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.கடந்த செப்., மாத ஏல அடிப்படையில், இந்த மாதத்திற்கான பசுந்தேயிலைக்கு, கொள்முதல் விலையாக கிலோவுக்கு, 14.74 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு குறைந்தபட்ச விலை வழங்காத தொழிற்சாலைகளை கண்காணித்து, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, ஹரி பிரகாஷ் கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X