பொது செய்தி

தமிழ்நாடு

புறநகரில் 'சரக்கு' விற்பனை அமோகம்

Added : அக் 05, 2021
Share
Advertisement
தாம்பரம் : தாம்பரம், சேலையூரில் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக, அதிகாலையிலேயே, 'டாஸ்மாக்' கடைகளில் மதுபான விற்பனை நடைபெறுவது, அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தாம்பரம், சேலையூர் பகுதிகளில் உள்ள 'டாஸ்மாக்' கடைகள் அதிகாலை 5:00 மணிக்கே திறக்கப்பட்டு, அரசு விதிகளுக்கு புறம்பாக மதுபான விற்பனை நடைபெறுகிறது. அதே போல், தாம்பரம் காவல் நிலைய,

தாம்பரம் : தாம்பரம், சேலையூரில் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக, அதிகாலையிலேயே, 'டாஸ்மாக்' கடைகளில் மதுபான விற்பனை நடைபெறுவது, அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தாம்பரம், சேலையூர் பகுதிகளில் உள்ள 'டாஸ்மாக்' கடைகள் அதிகாலை 5:00 மணிக்கே திறக்கப்பட்டு, அரசு விதிகளுக்கு புறம்பாக மதுபான விற்பனை நடைபெறுகிறது. அதே போல், தாம்பரம் காவல் நிலைய, எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள, டாஸ்மாக் கடைகளில், விடிய விடிய கள்ளத்தனமாக மது விற்பனை நடக்கிறது.

தற்போது, தாம்பரத்தை ஒட்டியுள்ள ஊராட்சிகளில், உள்ளாட்சி தேர்தல் நடப்பதால், தேர்தல் முடியும் வரை, அங்கு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.எனவே, தேர்தல் நடைபெறும் இடங்களை ஒட்டியுள்ள நகர்ப்புற பகுதிகளில், டாஸ்மாக் கடைகளில், மது வாங்க கூட்டம் குவிகிறது. இதை சாதகமாக பயன்படுத்தும் விற்பனையாளர்கள், கூடுதல் விலைக்கு விற்பதுடன், அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பும், பின்பும் கடைகளை திறந்து வைத்து, கள்ளத்தனமாக மது விற்று கல்லா கட்டி வருகின்றனர்.இதனால்,

அப்பகுதிகளை சுற்றி வசிக்கும் குடியிருப்பு வாசிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குடிமகன்களின் அட்டூழியம், கள்ள மதுபான விற்பனையையும் தடுக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்திஉள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X