அஸ்தினாபுரத்தில் குழாய் உடைப்பு குடிநீர் கிடைக்காமல் மக்கள் தவிப்பு

Added : அக் 05, 2021
Share
Advertisement
குரோம்பேட்டை : அஸ்தினாபுரத்தில், புதை மின் வடம் பதிக்கும் போது, குடிநீர் குழாய் உடைந்ததால், குடிநீர் கிடைக்காமல், அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.பல்லாவரம் நகராட்சியில், புதை மின் வடம் பதிக்கும் பணி நடந்து வருகிறது. குடிநீர் குழாய், பாதாள சாக்கடை குழாய் உள்ள இடங்களை பார்க்காமல் இஷ்டத்திற்கு பள்ளம் தோண்டப்படுவதால், அப்பகுதியில், குடிநீர் குழாய்கள்
 அஸ்தினாபுரத்தில் குழாய் உடைப்பு குடிநீர் கிடைக்காமல் மக்கள் தவிப்பு

குரோம்பேட்டை : அஸ்தினாபுரத்தில், புதை மின் வடம் பதிக்கும் போது, குடிநீர் குழாய் உடைந்ததால், குடிநீர் கிடைக்காமல், அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

பல்லாவரம் நகராட்சியில், புதை மின் வடம் பதிக்கும் பணி நடந்து வருகிறது. குடிநீர் குழாய், பாதாள சாக்கடை குழாய் உள்ள இடங்களை பார்க்காமல் இஷ்டத்திற்கு பள்ளம் தோண்டப்படுவதால், அப்பகுதியில், குடிநீர் குழாய்கள் உடைபட்டுள்ளன. வடம் பதிக்க அனுமதி கொடுத்திருந்தாலும், கண்காணிக்க வேண்டிய நகராட்சி பொறியியல் பிரிவினர், பணி நடக்கும் இடத்தை முறையாக பார்வையிடாததால், பல இடங்களில், குடிநீர் குழாய் உடைந்து, தண்ணீர் வினியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.குறிப்பாக, 19வது வார்டு, அஸ்தினாபுரம், ஸ்ரீராம் நகர், ஒன்றாவது மெயின் ரோடில், 15 நாட்களுக்கு முன், வடம் பதிக்க பள்ளம் தோண்டினர். அப்போது, பாலாறு குழாயை உடைத்து விட்டனர். பொதுமக்கள் புகார் அளித்ததை அடுத்து, சில நாட்கள் கழித்து, குழாயை சரிசெய்ய மீண்டும் பள்ளம் தோண்டினர்.

ஆனால், சரிசெய்யாமல் அப்படியே விட்டு விட்டனர். இதனால், அப்பகுதி மக்கள் குடிநீருக்காக தவம் கிடக்கும் சூழல் நிலவுகிறது.இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:இப்பகுதியில், மெட்ரோ வாட்டர் குழாய் இன்னும் பதிக்கப்படவில்லை. பாலாறு குடிநீர் குழாயையும் உடைத்து விட்டனர். பாலாறு குழாயில் குடிநீர் வந்து, பல மாதங்கள் ஆகிறது.

குடிநீர் கட்டணம் செலுத்தியும், குடிநீருக்காக தவம் கிடக்கிறோம். பொறியியல் பிரிவினர் எதை பற்றியும் கவலைப்படுவதில்லை. நகர் முழுவதும் இப்பிரச்னை உள்ளது. இதை சரிசெய்ய, உயர் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X