பொது செய்தி

தமிழ்நாடு

கஞ்சா விற்பனை நால்வர் கைது

Added : அக் 05, 2021
Share
Advertisement
எம்.கே.பி. நகர் : சென்னை வியாசர்பாடி, எம்.கே.பி., நகர், 15வது மேற்கு குறுக்கு தெருவில், கஞ்சா மற்றும் மதுபானம் விற்கப்படுவதாக, எம்.கே.பி., நகர் நுண்ணறிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்படி, நேற்று காலை அப்பகுதியில் கண்காணித்த போது, வீடு ஒன்றில் கஞ்சா மற்றும் மதுபாட்டில்கள் விற்பனை செய்வது தெரிந்தது.தொடர்புடைய, அதே பகுதியைச் சேர்ந்த பிரபு, 38, விருதுநகர் மாவட்டம்

எம்.கே.பி. நகர் : சென்னை வியாசர்பாடி, எம்.கே.பி., நகர், 15வது மேற்கு குறுக்கு தெருவில், கஞ்சா மற்றும் மதுபானம் விற்கப்படுவதாக, எம்.கே.பி., நகர் நுண்ணறிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்படி, நேற்று காலை அப்பகுதியில் கண்காணித்த போது, வீடு ஒன்றில் கஞ்சா மற்றும் மதுபாட்டில்கள் விற்பனை செய்வது தெரிந்தது.தொடர்புடைய, அதே பகுதியைச் சேர்ந்த பிரபு, 38, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரைச் சேர்ந்த விஷ்ணு, 31, ஆகிய இருவரை கைது செய்தனர்.அவர்களிடமிருந்து, 1.3 கிலோ கஞ்சா மற்றும் 48 பிராந்தி மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.பின், இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஆர்.கே., நகர் கொருக்குப்பேட்டை, சுண்ணாம்பு கால்வாய் அருகே நின்ற பெண் உள்ளிட்ட இருவரை அழைத்து வண்ணாரப்பேட்டை போலீசார் விசாரித்ததில் அவர்கள் கஞ்சா விற்றது தெரிந்தது.அவர்கள், பீகாரைச் சேர்ந்த உதல்குமார், 30; மீஞ்சூர், அத்திப்பட்டை சேர்ந்த மஸ்தானி, 50, என தெரிந்தது.இருவரையும் கைது செய்து இரண்டு கிலோ கஞ்சா மற்றும் 75 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X