பொது செய்தி

தமிழ்நாடு

வரி வசூல் பணியில் டெங்கு தடுப்பு பணியாளர்கள்

Added : அக் 05, 2021
Share
Advertisement
அனகாபுத்துார் : அனகாபுத்துார் நகராட்சியில், வீட்டு வரி மற்றும் குடிநீர் கட்டணம் வசூலிக்கும் பணியில், டெங்கு தடுப்பு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அனகாபுத்துார் நகராட்சி, 18 வார்டுகளை கொண்டது. இங்கு 15 ஆயிரத்து 806 குடியிருப்புகள் உள்ளன. 51 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இந்நகராட்சியில், பிரதான வருவாயாக, வீட்டு வரி மற்றும் குடிநீர் கட்டணம் உள்ளது.நடப்பாண்டில், வீட்டு

அனகாபுத்துார் : அனகாபுத்துார் நகராட்சியில், வீட்டு வரி மற்றும் குடிநீர் கட்டணம் வசூலிக்கும் பணியில், டெங்கு தடுப்பு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அனகாபுத்துார் நகராட்சி, 18 வார்டுகளை கொண்டது. இங்கு 15 ஆயிரத்து 806 குடியிருப்புகள் உள்ளன. 51 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இந்நகராட்சியில், பிரதான வருவாயாக, வீட்டு வரி மற்றும் குடிநீர் கட்டணம் உள்ளது.நடப்பாண்டில், வீட்டு வரி, ஒரு கோடியே 7 லட்சம் ரூபாய்; குடிநீர் கட்டணம் 40 லட்சம் ரூபாய் வசூல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில், வீட்டு வரி, 39 லட்சம், குடிநீர் கட்டணம் 18 லட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட்டு உள்ளது.திட்டம்அடுத்தாண்டு, மார்ச் மாதத்திற்குள், 100 சதவீத வரி வசூல் செய்ய, நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக, தினசரி, வார்டுகளுக்கு செல்லும் டெங்கு தடுப்பு பணியாளர்கள் வாயிலாக, வரி வசூல் செய்யும் நடவடிக்கையில் நகராட்சி நிர்வாகம் களம் இறங்கியுள்ளது. இந்நகராட்சியில், 50 டெங்கு தடுப்பு பணியாளர்கள் உள்ளனர். இவர்கள், தினசரி, ஒவ்வொரு வார்டாக சென்று, டெங்கு தடுப்பு மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் சம்மந்தமாக ஆய்வு செய்கின்றனர். அதனால், இவர்கள் மூலம் வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது.ஒவ்வொரு பணியாளருக்கும், அவர்கள் செல்லும் தெருவில், வரி செலுத்த வேண்டியவர்களின் பட்டியல் கொடுக்கப்படும். பணியாளர்கள் குறிப்பிட்ட அந்த வீட்டிற்கு சென்று, டெங்கு தடுப்பு பணிகளை முடித்தவுடன், வரி பாக்கி குறித்து தெரிவித்து, உடனடியாக செலுத்தி, ஒத்துழைப்பு தருமாறு எடுத்துரைப்பர்.

நம்பிக்கை
இதையடுத்து, வீட்டு உரிமையாளர்களில் சிலர், டெங்கு தடுப்பு பணியாளர்களிடம், வரிக்கான கட்டணத்தை வழங்குவர். ஒரு சிலர், நகராட்சிக்கு சென்று வரி செலுத்துவர்.பணியாளர்கள் மூலம் பணம் கொடுப்பவர்களுக்கு, மறுநாள் அதற்கான ரசீது வழங்கப்படும்.இதன் முயற்சியால், பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று வரி வசூல் செய்யப்படுவதுடன், நகராட்சியின் வரி வருவாயும் விரைவில் வசூலிக்கப்படும் என, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X