இறந்த யானை குட்டி உடலுக்கு பிரேத பரிசோதனை| Dinamalar

இறந்த யானை குட்டி உடலுக்கு பிரேத பரிசோதனை

Added : அக் 05, 2021
பந்தலுார்:பந்தலுார் அருகே மழவன் சேரம்பாடி பகுதியில் உயிரிழந்த யானை குட்டியின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.பந்தலுார் அருகே, மழவன் சேரம்பாடி பகுதியில் கடந்த, 1-ம் தேதி இரவு மூன்று வயது மதிக்கத்தக்க ஆண் யானை குட்டி ஒன்று, தோட்டத்தில் உயிரிழந்தது. தாய் யானை உள்ளிட்ட மூன்று யானைகள் அதனை விட்டு அகலாத நிலையில், 3-ம் தேதி அங்கிருந்து வனத்திற்குள் சென்றன. கால்நடை

பந்தலுார்:பந்தலுார் அருகே மழவன் சேரம்பாடி பகுதியில் உயிரிழந்த யானை குட்டியின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.பந்தலுார் அருகே, மழவன் சேரம்பாடி பகுதியில் கடந்த, 1-ம் தேதி இரவு மூன்று வயது மதிக்கத்தக்க ஆண் யானை குட்டி ஒன்று, தோட்டத்தில் உயிரிழந்தது. தாய் யானை உள்ளிட்ட மூன்று யானைகள் அதனை விட்டு அகலாத நிலையில், 3-ம் தேதி அங்கிருந்து வனத்திற்குள் சென்றன. கால்நடை டாக்டர்கள் புலி பிடிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்ததால் பிரேத பரிசோதனை செய்ய இயலவில்லை.நேற்று மதியம் கால்நடை டாக்டர் டேவிட் மோகன் தலைமையிலான மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். உடல் பாகங்களை வேறு பகுதியில் அடக்கம் செய்வதற்காக, வேட்டை தடுப்பு காவலர்கள் தங்கள் தோளில் சுமந்து சென்றதால், மக்கள் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X