பொது செய்தி

இந்தியா

'சைகோவ் - டி' தடுப்பூசிக்கு ரூ.300 விலை நிர்ணயம்?

Updated : அக் 05, 2021 | Added : அக் 05, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி-'சைடஸ் கேடிலா' நிறுவனத்தால் 12 வயதுக்கு மேற்பட்டோருக்காக தயாரிக்கப்பட்டுள்ள, 'சைகோவ் - டி' தடுப்பூசியின் ஒரு டோஸ் விலை, 300 ரூபாயாக நிர்ணயிக்கப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.நம் நாட்டில், 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினருக்காக, சைகோவ் - டி என்ற தடுப்பூசியை குஜராத்தின் ஆமதாபாதை தலைமை இடமாக வைத்து இயங்கும் சைடஸ் கேடிலா என்ற

புதுடில்லி-'சைடஸ் கேடிலா' நிறுவனத்தால் 12 வயதுக்கு மேற்பட்டோருக்காக தயாரிக்கப்பட்டுள்ள, 'சைகோவ் - டி' தடுப்பூசியின் ஒரு டோஸ் விலை, 300 ரூபாயாக நிர்ணயிக்கப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.



latest tamil news


நம் நாட்டில், 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினருக்காக, சைகோவ் - டி என்ற தடுப்பூசியை குஜராத்தின் ஆமதாபாதை தலைமை இடமாக வைத்து இயங்கும் சைடஸ் கேடிலா என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. ஊசி இல்லாமல், 'இன்ஜெக்டர்' எனப்படும் சிறப்பு கருவியின் மூலம் மூக்கு வழியாக செலுத்தப்பட வேண்டிய இந்த தடுப்பூசியை, அவசர காலத்தில் பயன்படுத்துவதற்கு, டி.சி.ஜி.ஐ., எனப்படும் இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு ஆகஸ்டில் ஒப்புதல் அளித்தது.

இந்த சைகோவ் - டி தடுப்பூசிக்கு விலை நிர்ணயிக்கும் பணிகள் துவங்கி உள்ளன. இது தொடர்பாக, சைடஸ் கேடிலா நிறுவனத்திற்கும், மத்திய அரசுக்கும் இடையே தொடர்ந்து பேச்சு நடந்து வருகிறது.இந்த தடுப்பூசியின் ஒரு டோசுக்கு 300 ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. தனியார் மருத்துவமனைக்கு வேறு விலையில் விற்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


latest tamil news


இதற்கிடையே, தெலுங்கானாவின் ஐதராபாதை தலைமையிடமாக வைத்து இயங்கும், 'பாரத் பயோடெக்' நிறுவனம், 12 - 18 வயதுக்கு உட்பட்டோருக்காக தடுப்பூசியை தயாரித்து வருகிறது. எனினும், இதற்கு டி.சி.ஜி.ஐ., ஒப்புதல் அளிக்கவில்லை.இதனால் முன்னணியில் உள்ள சைகோவ் - டி தடுப்பூசி, சில வாரங்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
05-அக்-202104:48:57 IST Report Abuse
NicoleThomson தனியார் மருத்துவ நிறுவனங்களுக்கும் இதே விலையில் விற்கவேண்டும் என்று குறிப்பிடுங்கள் பிரதமரே .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X