சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.48 லட்சம் சொத்து குவிப்பு ஆர்.ஐ., மனைவி மீது வழக்கு

Added : அக் 05, 2021
Share
Advertisement
வேலுார்-வருமானத்திற்கு அதிகமாக, 48.45 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக, சிறப்பு வருவாய் ஆய்வாளர், அவர் மனைவி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அடுத்த மேல்புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவர், வேலுார் மண்டல கலால் அலுவலகத்தில், வருவாய் ஆய்வாளராகவும், ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில், சென்னை - கன்னியாகுமரி

வேலுார்-வருமானத்திற்கு அதிகமாக, 48.45 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக, சிறப்பு வருவாய் ஆய்வாளர், அவர் மனைவி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அடுத்த மேல்புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவர், வேலுார் மண்டல கலால் அலுவலகத்தில், வருவாய் ஆய்வாளராகவும், ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில், சென்னை - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் சாலை திட்டத்தில், சிறப்பு வருவாய் ஆய்வாளராகவும் பணியாற்றினார்.அரசு வேலை, இலவச வீட்டு மனைப்பட்டா வாங்கித் தருவதாக, 200க்கும் மேற்பட்டவர்களிடம், பல லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், இவரை கடந்த ஆண்டு வாலாஜாபேட்டை போலீசார் கைது செய்தனர். அவர் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்

மேலும், அவர் வருமானத்திற்கு அதிமாக சொத்துக்கள் சேர்த்ததாக புகார்கள் வந்தன.வேலுார் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையில், ராஜசேகர், அவரது மனைவி லதா ஆகியோர் பெயர்களில், 2013 ஜனவரி முதல் 2017 ஏப்ரல் வரை, 48 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் வாங்கியதும், இது அவரது வருமானத்தை விட, 454 சதவீதம் அதிகம் என்பதும் தெரிந்தது.இதையடுத்து, ராஜசேகர், லதா மீது வேலுார் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X