சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்..

Added : அக் 05, 2021
Share
Advertisement
சிசுவுக்கு விஷம் தந்து தாய் தற்கொலைதர்மபுரி: தர்மபுரி மாவட்டம், கோம்பையைச் சேர்ந்தவர்மகேந்திரன்; மனைவி அனிதா, 24. இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. நான்கு மாதங்களுக்கு முன் பிறந்த இரண்டாவது பெண் குழந்தையின் கால் சற்று ஊனமாக இருந்ததால், அனிதா வேதனை அடைந்தார்.கடந்த 2ம் தேதி அனிதா, பாலில் எலி மருந்தை கலந்து சிசுவுக்கு கொடுத்து தானும் குடித்துள்ளார். இருவரும்,

சிசுவுக்கு விஷம் தந்து தாய் தற்கொலை

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், கோம்பையைச் சேர்ந்தவர்மகேந்திரன்; மனைவி அனிதா, 24. இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. நான்கு மாதங்களுக்கு முன் பிறந்த இரண்டாவது பெண் குழந்தையின் கால் சற்று ஊனமாக இருந்ததால், அனிதா வேதனை அடைந்தார்.கடந்த 2ம் தேதி அனிதா, பாலில் எலி மருந்தை கலந்து சிசுவுக்கு கொடுத்து தானும் குடித்துள்ளார். இருவரும், தர்மபுரி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். நேற்று முன்தினம் இரவு அனிதா இறந்தார். குழந்தை தீவிர சிகிச்சையில் உள்ளது.

கல் குவாரியில் மூழ்கி 2 சிறுவர் பலி

திருநெல்வேலி: திருநெல்வேலி, வடக்கு தாழையூத்தைச் சேர்ந்தவர் சக்திவேல், 12; ஆறாம் வகுப்பு மாணவர்.தங்கபிரபு, 14; ஒன்பதாம் வகுப்பு மாணவர். அங்கு தனியாருக்கு சொந்தமான கல்குவாரி, பயன் பாடில்லாமல் மூடப்படாமல் உள்ளது. அதில் நேற்று குளிக்க சென்ற இருவரும் மூழ்கி பலியாயினர்.கங்கைகொண்டான் தீயணைப்பு படையினர் உடல்களை மீட்டனர்.

மாற்றுத்திறனாளி கொடூர கொலை

வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடி, அக்ரஹார நாட்டாமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன், 30; காது கேட்காத, பேச முடியாத மாற்றுத் திறனாளி. கொத்தனார் வேலை செய்து வந்தார். நேற்று காலை, குள்ளம்பட்டி பிரிவு சாலை கரடு பகுதியில் நிர்வாண நிலையில் இறந்து கிடந்தார். போலீசார் கூறுகையில், 'மணிகண்டன் தலையில் கல்லை போட்டும், மது பாட்டிலால் வயிற்றில் குத்தி வெறித்தனமாக கொலை செய்துள்ளனர். கள்ளக்காதல் விவகாரமா, முன்விரோதம் உள்ளதா என விசாரணை தொடர்கிறது. மணிகண்டனின் நண்பர்களான, பழ வியாபாரிகள் மூன்று பேரை பிடித்து விசாரிக்கிறோம்' என்றனர்

.கோர்ட் வளாகத்தில் திருமணம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வடக்குபட்டியைச் சேர்ந்தவர் ராம்கி, 30; அதே பகுதியில் வசிக்கும் உறவினர் கஸ்துாரி, 23, என்பவரை காதலித்துள்ளார். இதில் கர்ப்பமான கஸ்துாரியை, ராம்கி திருமணம் செய்ய மறுத்துள்ளார்.கஸ்துாரி புகாரின்படி, பலாத்கார வழக்கில் ராம்கியை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது.நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல்காதர், இரு தரப்பு வக்கீல்களும் சமரச பேச்சு நடத்தி, இருவருக்கும் திருமணம் செய்து வைக்க அறிவுறுத்தினார். இதையடுத்து, ராம்கி, கஸ்துாரி சம்மதத்துடன், நீதிமன்ற வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலில், நேற்று இருவருக்கும் திருமணம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X