சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.43 லட்சம் மோசடி: போலி வழக்கறிஞருக்கு சிறை

Added : அக் 05, 2021
Share
Advertisement
திண்டுக்கல்-- -குற்ற வழக்கில் விடுவிப்பதாக கூறி ரூ.43 லட்சம் மோசடியில் ஈடுபட்ட போலி வழக்கறிஞர் கார்த்திக்கிற்கு 6 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.திண்டுக்கல் ஆர்.எம்.காலனி பகுதி ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் உமையன் மகன் சிவநாத். 2015ல் குற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருந்து, ஜாமினில் வெளியே வந்தார். அவரை சந்தித்த

திண்டுக்கல்-- -குற்ற வழக்கில் விடுவிப்பதாக கூறி ரூ.43 லட்சம் மோசடியில் ஈடுபட்ட போலி வழக்கறிஞர் கார்த்திக்கிற்கு 6 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திண்டுக்கல் ஆர்.எம்.காலனி பகுதி ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் உமையன் மகன் சிவநாத். 2015ல் குற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருந்து, ஜாமினில் வெளியே வந்தார். அவரை சந்தித்த முருகபவனம் கார்த்தி 32, தான் ஒரு வழக்கறிஞர் எனக்கூறி அறிமுகமானார். 'உங்கள் மகன் சிவநாத்தோடு சேர்ந்து என் தம்பி சிவா மீதும் வழக்கு பதிந்துள்ளனர். இருவரையும் வழக்கிலிருந்து விடுவிக்கிறேன்' என உத்தரவாதம் அளித்தார்.ரூ.43 லட்சம் மோசடிஇதற்காக அவரிடம் 2015 முதல் 2017ம் ஆண்டு வரை 15 தவணையாக ரூ.43 லட்சத்து 8 ஆயிரம் பெற்றார். ஆனாலும் வழக்கில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.

தொடர்ந்து வலியுறுத்தியும் கார்த்திக் காலம் தாழ்த்தி வந்தார். 2021 ஜனவரியில் நீதிமன்ற உத்தரவு கிடைத்து விட்டதாகக் கூறி உமையனிடம் நகலை வழங்கினார். உமையன் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் உத்தரவை காட்டியபோது, அது போலி, கார்த்தி வழக்கறிஞரே அல்ல என்றும் தெரிந்தது.உமையன் குடும்பத்தார் நீதிமன்றத்தை நாடினர். நீதிமன்றம் குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க உத்தரவிட்டது. விசாரணையில் மோசடி உறுதியானது. மேலும் கார்த்திக் மீது பல மோசடி வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது.

ஏப்ரலில் போலீசார் கைது செய்ய முயன்றபோது, ஆசிட் குடித்ததாக நாடகமாடிய கார்த்திக், மருத்துமனையில் சேர்ந்தார். அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மோசடி வழக்கில் நேற்று திண்டுக்கல் குற்றவியல் நீதிமன்றம் 2 தீர்ப்பளித்தது. பல்வேறு பிரிவுகளில் தொடரப்பட்ட வழக்கில் கார்த்திக்கிற்கு 6 ஆண்டு சிறைத்தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கார்த்திகேயன் உத்தர விட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X