சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெரியகுளத்தில் அரசு நிலம் குறைவாக மதிப்பீடு :தேனி கலெக்டர் முரளீதரன் உத்தரவு

Added : அக் 05, 2021
Share
Advertisement
தேனி--பெரியகுளம் தாலுகா வடவீரநாயக்கன்பட்டியில் உள்ள அரசு புறம்போக்கு குறைவாக மதிப்பீடு செய்து, அரசுக்கு இழப்பீடு ஏற்பட உடந்தையாக இருந்த 2 தாசில்தார்கள், 2 துணைதாசில்கார்களை தேனி கலெக்டர் முரளீதரன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.பெரியகுளம் தாலுகா வடவீரநாயக்கன்பட்டியில் தேனி கலெக்டர் குடியிருப்பு, பெருந்திட்ட வளாகம், ஆயுதப்படை மைதானம் அமைந்துள்ளது. இங்கு சர்வே

தேனி--பெரியகுளம் தாலுகா வடவீரநாயக்கன்பட்டியில் உள்ள அரசு புறம்போக்கு குறைவாக மதிப்பீடு செய்து, அரசுக்கு இழப்பீடு ஏற்பட உடந்தையாக இருந்த 2 தாசில்தார்கள், 2 துணைதாசில்கார்களை தேனி கலெக்டர் முரளீதரன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

பெரியகுளம் தாலுகா வடவீரநாயக்கன்பட்டியில் தேனி கலெக்டர் குடியிருப்பு, பெருந்திட்ட வளாகம், ஆயுதப்படை மைதானம் அமைந்துள்ளது. இங்கு சர்வே எண் 814 ல் 200க்கும் அதிகமான ஏக்கர் உள்ள நிலத்தை 75 ஏக்கர் என மிகக்குறைவாக மதிப்பீடு செய்து, பட்டா வழங்கியது தெரிய வந்தது.

இது குறித்து சப்--கலெக்டர் ரிஷப் விசாரித்தார். அதில் தாசில்தார்கள் கிருஷ்ணகுமார் (பெரியகுளம்), ரத்தினமாலா (போடி சமுகநல பாதுகாப்புத் திட்டம்), தேர்தல் துணை தாசில்தார்கள் மோகன்ராம் (போடி), சஞ்சீவ்காந்தி (ஆண்டிபட்டி) உடந்தையாக இருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதனால் நால்வரையும் சப்--கலெக்டர் பரிந்துரையில், கலெக்டர் முரளீதரன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

கலெக்டர் கூறுகையில், முதற்கட்ட விசாரணை முடிந்து சஸ்பெண்ட செய்துள்ளோம். துறை ரீதியான விளக்கம் கேட்கப்படும். சட்ட நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்படும்.'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X