ரஷ்ய அதிநவீன ஏவுகணை சோதனை வெற்றி| Dinamalar

ரஷ்ய அதிநவீன ஏவுகணை சோதனை வெற்றி

Updated : அக் 05, 2021 | Added : அக் 05, 2021 | கருத்துகள் (2)
Share
மாஸ்கோ-ரஷ்யா 'சிர்கான்' என்ற அதிநவீன 'ஹைபர்சோனிக்' ஏவுகணையை தயாரித்துள்ளது. இது கடற்படை கப்பலில் இருந்து பலமுறை பரிசோதனைக்காக ஏவப்பட்டு இலக்கை துல்லியமாக தாக்கியது.இந்நிலையில் சிர்கான் ஏவுகணையை, 'செவெரோட்டவின்ஸ்க்' எனப்படும் நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவும் பரிசோதனை முதல் முறையாக நேற்று நடந்தது.சோதனையின்போது அதற்கான இலக்கை ஏவுகணை மிகச்சரியாக

மாஸ்கோ-ரஷ்யா 'சிர்கான்' என்ற அதிநவீன 'ஹைபர்சோனிக்' ஏவுகணையை தயாரித்துள்ளது. இது கடற்படை கப்பலில் இருந்து பலமுறை பரிசோதனைக்காக ஏவப்பட்டு இலக்கை துல்லியமாக தாக்கியது.



latest tamil news


இந்நிலையில் சிர்கான் ஏவுகணையை, 'செவெரோட்டவின்ஸ்க்' எனப்படும் நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவும் பரிசோதனை முதல் முறையாக நேற்று நடந்தது.சோதனையின்போது அதற்கான இலக்கை ஏவுகணை மிகச்சரியாக தாக்கியதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.


latest tamil news


இதுகுறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறும்போது, ''சிர்கான் ஏவுகணை, ஒலியை விட ஒன்பது மடங்கு வேகமாக பறக்கும் திறன் உடையது; இது, ரஷ்யாவின் ராணுவ பலத்தை மேலும் அதிகரிக்கும்,'' என்றார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X