பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: தி.மு.க.,வினருக்கு நிகர் யாருமில்லை!

Updated : அக் 05, 2021 | Added : அக் 05, 2021 | கருத்துகள் (88)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:என்.மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:'சட்டசபை தேர்தலின் போது தி.மு.க., அளித்த 505 வாக்குறுதிகளில், 202 வாக்குறுதிகளை, பதவிக்கு வந்த 142 நாட்களில் நிறைவேற்றி விட்டோம். இது மாதிரி மகத்தான சாதனைகளை, இந்தியாவில் வேறு எந்த மாநில அரசும் செய்ததில்லை' என தம்பட்டம்
இது, உங்கள், இடம், தி.மு.க.,


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:என்.மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

'சட்டசபை தேர்தலின் போது தி.மு.க., அளித்த 505 வாக்குறுதிகளில், 202 வாக்குறுதிகளை, பதவிக்கு வந்த 142 நாட்களில் நிறைவேற்றி விட்டோம். இது மாதிரி மகத்தான சாதனைகளை, இந்தியாவில் வேறு எந்த மாநில அரசும் செய்ததில்லை' என தம்பட்டம் அடித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

தி.மு.க.,வின் 'ஸ்பெஷாலிட்டி' என்ன தெரியுமோ?'சொன்னதையும் செய்தோம்; சொல்லாததையும் செய்தோம்' என, 'புருடா'க்களை அள்ளி விடுவது தான்!பெட்ரோல் விலையை 5 ரூபாய் குறைப்பதாக சொன்னவர்கள், 3 ரூபாய் மட்டுமே குறைத்தனர். டீசல் விலையை 3 ரூபாய் குறைப்பதாக சொன்ன வாக்குறுதியை மறந்து விட்டனர்.ரேஷன் அரிசி கார்டு வைத்திருப்போருக்கு மட்டுமே, கொரோனா நிவாரணம் 4,000 ரூபாய் கொடுத்தனர். சர்க்கரை கார்டு வைத்திருப்போருக்கு, 'அல்வா' கொடுத்தனர்.

'நீட் தேர்வை ரத்து செய்வோம்' என உறுதியாக சொன்னவர்கள், அதை செய்ய முடியாமல், மாணவர்களை தைரியமாக தேர்வு எழுதச் சொல்லி வேடிக்கை பார்த்தனர்.அரசு ஊழியர்களுக்கு ஜூலை முதல் தர வேண்டிய அகவிலைப்படி உயர்வை, அடுத்த ஜனவரியில் இருந்து கொடுப்பதாக 'ஜகா' வாங்கினர்.'பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் செய்வோம்' என்றனர்; இப்போது, அதை அமல் செய்தால் கஜானா காலியாகிவிடும் என்று, 'அந்தர் பல்டி' அடிக்கின்றனர்.


latest tamil news


காஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம்; இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் போன்றவற்றிற்கு, அதை அமல் செய்யும் தேதியை சொல்லவில்லை.தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதிக்கு, 39 கோடி ரூபாய் செலவில் நினைவு மண்டபம் கட்ட வேண்டும்; மதுரையில் அவர் பெயரில் நுாலகம் அமைக்க வேண்டும்.இது தவிர இட ஒதுக்கீடு கேட்டு போராடி உயிர் நீத்தோருக்கு சிலைகள் வைக்க வேண்டும்.

சமூக நீதிக்காக போராடிய தியாகிகளுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும். இது போன்ற முக்கியமான வேலைகள் செய்து முடிப்பதை தான், முதல்வர் ஸ்டாலின் பெரிய சாதனையாக நினைக்கிறார் போலும்.கடுகு அளவு செய்து, அதை மலை அளவு போல 'படம்' காட்டுவதில், தி.மு.க.,வினருக்கு நிகர் வேறு யாருமில்லை!

Advertisement
வாசகர் கருத்து (88)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Duruvesan - Dharmapuri,இந்தியா
05-அக்-202121:53:54 IST Report Abuse
Duruvesan பாவாடை மற்றும் மூர்கன் ஹிந்து பெயரில் திரிவது ஏன் 😂
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
05-அக்-202121:28:55 IST Report Abuse
Narayanan There was a promise from this DMK that they will again give urududal. Of course karunanithi brought that scheme and that was ped during his period only . There was a wrong propaganda that AIADMK was ped that scheme . Now the came back to the power fore months has gone . but nothing is happened. During the AIADMK rule I was able to get the things in 1st week itself . now items are not available even after 15 days . what they are ruling ?
Rate this:
Cancel
shanan -  ( Posted via: Dinamalar Android App )
05-அக்-202121:14:24 IST Report Abuse
shanan இது டிரைலர் மட்டும் தான் மெயின் show உள்ளாட்சித் தேர்தல் முடிந்தவுடன் இருக்கிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X