பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகளை போற்றும் ஓவியம்

Added : அக் 05, 2021
Share
Advertisement
சோழிங்கநல்லுார் : ஆட்டிசம்' பாதிப்புக்குள்ளான மாற்றுத்திறனாளிகளை போற்றும் விதமாக, சோழிங்கநல்லுார் அரசு பள்ளி சுவரில் ஓவியம் வரைப்பட்டது.சென்னையை அழகுப்படுத்தும் விதமாக, சிங்கார சென்னை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, சென்னை மாநகராட்சி பள்ளி சுவர்களை, ஓவியம் வரைந்து அழகுப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.சென்னை மாநகராட்சி மற்றும் தனியார்
 மாற்றுத்திறனாளிகளை போற்றும் ஓவியம்

சோழிங்கநல்லுார் : ஆட்டிசம்' பாதிப்புக்குள்ளான மாற்றுத்திறனாளிகளை போற்றும் விதமாக, சோழிங்கநல்லுார் அரசு பள்ளி சுவரில் ஓவியம் வரைப்பட்டது.

சென்னையை அழகுப்படுத்தும் விதமாக, சிங்கார சென்னை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, சென்னை மாநகராட்சி பள்ளி சுவர்களை, ஓவியம் வரைந்து அழகுப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.சென்னை மாநகராட்சி மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் இணைந்து, சோழிங்கநல்லுார் அரசு மேல்நிலைப் பள்ளி சுவரில் ஓவியம் வரையப்பட்டது. அதுவும், 'ஆட்டிசம்' பாதித்த மாற்றுத்திறனாளிகளை போன்றும் விதமான ஓவியங்கள் வரையப்பட்டன. இதில், ஆட்டிசம் பாதித்த மாற்றுத்திறனாளி சிறுவர், சிறுமியரும் கலந்து கொண்டனர். அவர்கள், ஆட்டிசம் என்பது குறையில்லை;

மனித இனத்தின் பரிணாம வளர்ச்சி என, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கையில் வண்ணம் பூசி, அதை சுவரில் தடம் பதித்தனர்.இது குறித்து, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ராஜலட்சுமி கூறியதாவது: ஆட்டிசம் பாதித்தவர்கள் எண்ணிக்கை, சற்று அதிகரித்து வருகிறது.இதற்காக, பெற்றோர் பயப்பட தேவையில்லை. ஆட்டிசம் பாதித்த மாணவ, மாணவியரை ஒதுக்கி வைக்காமல், பள்ளியில் பிற மாணவ - மாணவியருடன் சேர்த்து, கல்வி வழங்கும் சூழல் உருவாக வேண்டும். இது குறித்த புரிதல் பொதுமக்களுக்கு ஏற்பட வேண்டும். இதற்காக, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X