தமிழ்நாடு

ரூ.40 கோடி அரசு நிலம் அய்யப்பன்தாங்கலில் ஆக்கிரமிப்பு

Added : அக் 05, 2021
Share
Advertisement
அய்யப்பன்தாங்கல் : அய்யப்பன்தாங்கல் ஊராட்சியில், 40 கோடி ரூபாய் மதிப்பிலான, சர்வே எண், 38 மேய்க்கால் புறம்போக்கு அரசு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்து உள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், அய்யப்பன்தாங்கல் ஊராட்சி, மேட்டுக் காலனி, போரூர் காவல் நிலையம் எதிரே, சர்வே எண், 38 அரசு நிலம் உள்ளது. இந்த, 1.86 ஏக்கர் நிலம், அரசு ஆவணங்களில், 'அரசு மேய்க்கால்
 ரூ.40 கோடி அரசு நிலம் அய்யப்பன்தாங்கலில் ஆக்கிரமிப்பு

அய்யப்பன்தாங்கல் : அய்யப்பன்தாங்கல் ஊராட்சியில், 40 கோடி ரூபாய் மதிப்பிலான, சர்வே எண், 38 மேய்க்கால் புறம்போக்கு அரசு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்து உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், அய்யப்பன்தாங்கல் ஊராட்சி, மேட்டுக் காலனி, போரூர் காவல் நிலையம் எதிரே, சர்வே எண், 38 அரசு நிலம் உள்ளது. இந்த, 1.86 ஏக்கர் நிலம், அரசு ஆவணங்களில், 'அரசு மேய்க்கால் புறம்போக்கு நிலம்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.அதிகாரிகள் உதவிஇவ்விடத்தில், ஆதி திராவிட குடும்பத்தினருக்கு தேவையான பொது கழிப்பறை, நுாலகம், குடிநீர் தொட்டி ஆகியவை கட்ட, 2006ல் அய்யப்பன்தாங்கல் ஊராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து, அங்கு 'செப்டிக் டேங்க்' கட்டப்பட்டது. ஆனால், ஆக்கிரமிப்பாளர்கள், செப்டிக் டேங்கை இடித்து, நிலத்தை தங்கள் வசப்படுத்தியுள்ளனர்.பின், 2019ல், அரசு நிலத்தை மனைகளாக பிரித்து, தற்காலிக சாலை அமைத்தனர். மேலும், ஐந்து தனி நபர்கள் பெயரில், அதிகாரிகள் உதவியுடன் பட்டா வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து அய்யப்பன்தாங்கல்யப்பன்தாங்கல், பரணிபுத்துார் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் சார்பில், காவல் துறை, வருவாய் துறை மற்றும் முதல்வர் தனிப்பிரிவிற்கும் புகார் அளிக்கப்பட்டது.தற்போது, இந்த நிலத்தில், இரண்டு வீடுகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், மேலும், சில வீடுகள் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.நடவடிக்கைஅய்யப்பன்தாங்கலில் உள்ள ஆரம்பசு காதார நிலையம், போதிய இடவசதி இல்லாத குறுகிய கட்டடத்தில் இயங்கி வருகிறது.

இதைபோல், தபால் நிலையம் வாடகை கட்டடத்தில் செயல்படுகிறது.இந்த ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டால், பொது பயன்பாட்டிற்கு உபயோகமாக இருக்கும். போரூர் ஏரியில் இருந்த ஆக்கிரமிப்புகளை, தற்போதையை முதல்வர் ஸ்டாலின், சென்னை மேயராக இருந்த போது, நேரில் சென்று அகற்றினார்.இந்த, 40 கோடி ரூபாய் மதிப்புள்ள, 1.86 ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமிக்க, தி.மு.க.,வை சேர்ந்தவர்கள் துணையாக உள்ளனர். இதனால், அரசு நிலத்தை மீட்க முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்துள்ளது.ஆக்கிரமிப்பு கடந்து வந்த பாதை இது குறித்து, அய்யப்பன்தாங்கல், பரணிபுத்துார் மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு சங்க நிர்வாகி, ஆர்.கே.ரவிச்சந்திரன் கூறியதாவது:அய்யப்பன்தாங்கலில், சர்வே எண், 38 அரசு நில ஆக்கிரமிப்பு குறித்து, 2007ல் அப்போதைய முதல்வருக்கு கடிதம் எழுதினோம். பின், 2010ம் ஆண்டு ஊராட்சி மன்ற தலைவர், 2020ல் போரூர் காவல் நிலையம் மற்றும் மாவட்ட கலெக்டருக்கு புகார் அளித்தோம்.

இதில், 2020 நவம்பர் மாதம், 'உரிய நடவடிக்கை எடுத்து, அதன் விபரத்தை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும்' என, குன்றத்துார் வட்டாட்சியருக்கு, மாவட்ட கலெக்டர் கடிதம் அனுப்பினார்.ஆனால், எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில், ஜீவா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அரசியல்வாதிகளின் அழுத்தம் மற்றும் பல்வேறு காரணங்களால், வழக்கை திரும்ப பெற்றார்.தற்போது, இந்த நிலத்தில் ஷீட்டால் வேலி அமைத்து கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் உள்ளே செல்லாமல் இருக்க, காவலாளியும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அரசு நிலத்தை மீட்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X