தமிழ்நாடு

70 கோடியில் புதிய மேம்பாலம்

Added : அக் 05, 2021
Share
Advertisement
தி.நகர் : தி.நகர் தெற்கு உஸ்மான் சாலை - அண்ணா சாலையை இணைக்கும் விதமாக, 70 கோடி ரூபாய் செலவில், புது மேம்பாலம் கட்டுவதற்கான முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டு உள்ளன.சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கப் பாதை, ஓட்டேரி கொன்னுார் நெடுஞ்சாலை, தி.நகர் தெற்கு உஸ்மான் சாலை ஆகிய மூன்று இடங்களில், 335 கோடி ரூபாய் செலவில், மேம்பாலங்கள் அமைக்க அரசு

தி.நகர் : தி.நகர் தெற்கு உஸ்மான் சாலை - அண்ணா சாலையை இணைக்கும் விதமாக, 70 கோடி ரூபாய் செலவில், புது மேம்பாலம் கட்டுவதற்கான முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டு உள்ளன.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கப் பாதை, ஓட்டேரி கொன்னுார் நெடுஞ்சாலை, தி.நகர் தெற்கு உஸ்மான் சாலை ஆகிய மூன்று இடங்களில், 335 கோடி ரூபாய் செலவில், மேம்பாலங்கள் அமைக்க அரசு முடிவு செய்தது. மதிப்பீடு தயாரிப்புஇது குறித்து, 2021 - 22 சட்டசபை நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. தி.நகர், துரைசாமி சாலை - உஸ்மான் சாலை சந்திப்பில் உள்ள மேம்பாலத்தின் தெற்கு பகுதியில் உள்ள சாய்தளத்தை, ஜி.ஆர்.டி., ஜுவல்லரி அருகே தகர்த்து, அங்கிருந்து தெற்கு உஸ்மான் சாலை வழியாக அண்ணா சாலை சந்திப்பு வரை மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.இதில், சிவ விஷ்ணு கோவில் அருகே, மேம்பாலத்தில் இருந்து, தி.நகர் பஸ் நிலையத்திற்கு பஸ்கள் செல்லவும், எம்.எல்.ஏ., அலுவலகம் அருகே, பஸ் நிலையத்தில் இருந்து மேம்பாலத்தில் பஸ்கள் ஏறவும் வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.இந்த மேம்பால பணிகளுக்கான இடத்தை, இரண்டு மாதங்களில் சர்வே செய்து, திட்டமதிப்பீடு தயாரிக்கும் பொறுப்பை, தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த மேம்பால பணிக்கு, 70 கோடி ரூபாய் வரை செலவாகும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.மேம்பாலங்கள் இணைப்புதி.நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, தி.மு.க., ஆட்சியின் போது, 2008ல், 9.72 கோடி ரூபாய் மதிப்பில், வடக்கு உஸ்மான் சாலை - மகாலிங்கபுரம் சாலை சந்திப்பிலும், 19.80 கோடி ரூபாய் மதிப்பில், துரைசாமி சாலை - உஸ்மான் சாலை சந்திப்பிலும், இரு மேம்பாலங்கள் கட்டப்பட்டன. உஸ்மான் சாலையில் உள்ள மேம்பாலத்தையும், நுங்கம்பாக்கத்திலிருந்து தி.நகர் நோக்கி வரும் மகாலிங்கபுரம் மேம்பாலத்தையும் இணைக்க, 2014ல் மாநகராட்சி திட்டமிட்டு இருந்தது.உஸ்மான் சாலை மற்றும் மகாலிங்கபுரம் மேம்பாலங்கள், தலா, 600 மீட்டர் நீளம் உடையவை. இவற்றுக்கு இடையே, 1 கி.மீ., துாரம் உள்ளது.சிக்கல்இதில் உஸ்மான் சாலை மேம்பாலத்தின் வடக்கு பகுதியில் உள்ள சாய்தளத்தை தகர்த்து, அந்த மேம்பாலத்தை, மகாலிங்கபுரம் மேம்பாலம் வரை நீட்டிக்க, மண் பரிசோதனை நடத்தப்பட்டது.ஆனால், நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல் மற்றும் பல்வேறு காரணங்களால் இந்த திட்டம் கைவிடப்பட்டது.தி.நகர் முழுதும் பாதசாரிகளுக்கே?இது குறித்து மாநகராட்சி மேம்பாலத்துறை அதிகாரிகள் கூறியதாவது:தெற்கு உஸ்மான் சாலையில் அமைய உள்ள மேம்பாலத்தால், தி.நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும். சாலைகளில் வாகனப் போக்குவரத்தை குறைத்து, தி.நகரை பாதசாரிகளுக்கான இடமாக மாற்றுவது தான், நீண்ட கால திட்டம். உஸ்மான் சாலை மற்றும் மகாலிங்கபுரம் மேம்பாலங்கள் இணைப்பு திட்டத்தில், நிலம் கையகப்படுத்த அதிக பண செலவு ஏற்படும். பிற்காலத்தில் தேவைப்பட்டால், இந்த இரு மேம்பாலங்களும் இணைக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.என்ன பயன்?இது குறித்து தி.நகர் குடியிருப்போர் நலச்சங்க செயலர் பி. கண்ணன் கூறியதாவது:மேம்பாலங்கள் கட்டுவது, 'பேஷன்' ஆகி விட்டது. ஏற்கனவே கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தால் போக்குவரத்து நெரிசல் எதிர்பார்த்த அளவுக்கு குறையவில்லை.தி.நகரில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. மேம்பாலம் கட்டுவதால் குடியிருப்புவாசிகளுக்கு எந்த பயனும் ஏற்படாது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X