பொது செய்தி

தமிழ்நாடு

நீர் வழித்தடங்களில் துார்வாரும் பணி செம்மஞ்சேரி குடியிருப்புகளுக்கு விடிவு

Added : அக் 05, 2021
Share
Advertisement
செம்மஞ்சேரி : செம்மஞ்சேரி, ஜெவகர்நகர், எழில்முகநகரில் மழைநீர் புகுவதை தடுக்க, அங்குள்ள, நீர்வழித்தடங்களில் துார்வாரும் பணி துரித கதியில் நடந்து வருகிறது.சோழிங்கநல்லுார் மண்டலம், 200வது வார்டு, செம்மஞ்சேரி, ஜெவகர்நகர், எழில்முகநகர் பகுதியில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இந்த நகர் பகுதிகள், ஓ.எம்.ஆர்., பகுதியை விட தாழ்வாக உள்ளது. மேலும், தாழம்பூர், காரணை சுற்றுவட்டார
 நீர் வழித்தடங்களில் துார்வாரும் பணி  செம்மஞ்சேரி குடியிருப்புகளுக்கு விடிவு


செம்மஞ்சேரி : செம்மஞ்சேரி, ஜெவகர்நகர், எழில்முகநகரில் மழைநீர் புகுவதை தடுக்க, அங்குள்ள, நீர்வழித்தடங்களில் துார்வாரும் பணி துரித கதியில் நடந்து வருகிறது.

சோழிங்கநல்லுார் மண்டலம், 200வது வார்டு, செம்மஞ்சேரி, ஜெவகர்நகர், எழில்முகநகர் பகுதியில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இந்த நகர் பகுதிகள், ஓ.எம்.ஆர்., பகுதியை விட தாழ்வாக உள்ளது. மேலும், தாழம்பூர், காரணை சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏரி உபரிநீர், ஜெவகர்நகர், சுனாமிநகர், டி.எல்.எப்., ஒக்கியம் துரைப்பாக்கம் வழியாக, பகிங்ஹாம் கால்வாயை அடைகிறது.நீர்வழித்தடங்கள், கால்வாய் கட்டமைப்புடன் இல்லை. பல இடங்களில், மண் கால்வாயாக உள்ளது.அதில், மண், குப்பை நிறைந்து அடைப்பு ஏற்படும்.
இதனால், முந்தைய ஆண்டுகளில் பெய்த பருவ மழையின்போது, நீர்வழித்தடத்தில், நீரோட்டம் தடைபட்டு, ஜெவகர்நகர், எழில்முகநகரில் வெள்ளம் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது.வரும் பருவமழையின்போது, அதுபோன்ற சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க, மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட, நீர்வழித்தடங்களில் உள்ள அடைப்புகளை சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.பொக்லைன் இயந்திரம் கொண்டு 4 கி.மீ., துார் வாரும் பணி நடக்கிறது. இதன்மூலம், கனமழையின்போது, வெள்ளத்தால் குடியிருப்பு பகுதிகள் பாதிப்பதை தடுக்க முடியும் என, மாநகராட்சி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X