பொது செய்தி

தமிழ்நாடு

நவராத்திரி திருவிழாவுக்கு வித்தியாசமான பொம்மைகள்

Added : அக் 05, 2021
Share
Advertisement
சென்னை : நவராத்திரி திருவிழா துவங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்த ஆண்டு, வித்தியாசமான பொம்மைகளின் வரவு அதிகரித்து உள்ளது. இது போன்ற பொம்மைகளை காணவும், வாங்கவும் வரும் பார்வையாளர்களால், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலைச் சுற்றியுள்ள தெருக்கள் களைகட்டியுள்ளது.நவராத்திரி என்றாலே, ஒன்பது நாட்களிலும் அவரவர் வீடுகளில், அவரவர் சக்திக்கு உட்பட்டு கொலு
நவராத்திரி திருவிழாவுக்கு  வித்தியாசமான பொம்மைகள்

சென்னை : நவராத்திரி திருவிழா துவங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்த ஆண்டு, வித்தியாசமான பொம்மைகளின் வரவு அதிகரித்து உள்ளது.

இது போன்ற பொம்மைகளை காணவும், வாங்கவும் வரும் பார்வையாளர்களால், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலைச் சுற்றியுள்ள தெருக்கள் களைகட்டியுள்ளது.நவராத்திரி என்றாலே, ஒன்பது நாட்களிலும் அவரவர் வீடுகளில், அவரவர் சக்திக்கு உட்பட்டு கொலு வைப்பர். இந்த கொலுவை பார்க்க அழைப்பும் விடுப்பர். இதன் காரணமாக, உறவும், நட்பும் புதுப்பிக்கப்பட்டு, இல்லங்களிலும், உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கும்.கடந்த ஆண்டு கொரோனா காரணமாக யாரும், யார் வீட்டுக்கும் போகவுமில்லை; அழைக்கவுமில்லை. ஒரு நல்ல பண்டிகையை தவறவிட்ட வருத்தம், எல்லார் மனதிலும் இருந்து வந்தது. அந்தக் குறையை நிறைவு செய்யும் வகையில்,

இந்த ஆண்டு பழைய பொம்மைகளுடன், புதிய பொம்மைகளையும் வைத்து கொண்டாட மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக, புதுமையான பல பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன.பொம்மை என்றாலே, சுவாமி, அம்மன் சிலைகள் தான் நினைவிற்கு வரும். எனினும், இந்த ஆண்டு, கடவுளர் சிலைகளையும் வழக்கம் போல் இல்லாமல், வித்தியாசமாக செய்துள்ளனர் பொம்மை வடிவமைக்கும் கலைஞர்கள். மேலும், சுவாமி பொம்மைகள் அல்லாமல், பல புதுமையான பொம்மைகளும் இங்கே இடம் பெற்றுள்ளன.மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெருக்களை சுற்றி, நுாற்றுக்கணக்கான பொம்மை கடைகள் முளைத்துள்ளன. இவர்கள் விற்பதற்கும், மக்கள் நின்று வாங்குவதற்கும் ஏற்ற வகையில், தடுப்பு வைத்து போலீசார் உதவி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X