தமிழ்நாடு

வரி ஏய்ப்பு செய்வோர் மீது நடவடிக்கை ஜி.எஸ்.டி., கமிஷனர் எச்சரிக்கை

Added : அக் 05, 2021
Share
Advertisement
சென்னை : ''போலி விற்பனை ரசீது பயன்படுத்தி, வரி ஏய்ப்பு செய்வோர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என, தமிழகம் மற்றும் புதுச்சேரி மண்டல ஜி.எஸ்.டி., முதன்மை கமிஷனர் எம்.வி.எஸ். சவுத்ரி தெரிவித்தார்.நாட்டின், 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, நந்தனத்தில் உள்ள, சென்னை தெற்கு ஜி.எஸ்.டி., கமிஷனர் அலுவலகத்தில், காதி விற்பனை கண்காட்சி நேற்று
 வரி ஏய்ப்பு செய்வோர் மீது நடவடிக்கை ஜி.எஸ்.டி., கமிஷனர் எச்சரிக்கை

சென்னை : ''போலி விற்பனை ரசீது பயன்படுத்தி, வரி ஏய்ப்பு செய்வோர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என, தமிழகம் மற்றும் புதுச்சேரி மண்டல ஜி.எஸ்.டி., முதன்மை கமிஷனர் எம்.வி.எஸ். சவுத்ரி தெரிவித்தார்.நாட்டின், 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, நந்தனத்தில் உள்ள, சென்னை தெற்கு ஜி.எஸ்.டி., கமிஷனர் அலுவலகத்தில், காதி விற்பனை கண்காட்சி நேற்று துவங்கியது.

கண்காட்சியை, தமிழகம் மற்றும் புதுச்சேரி மண்டல ஜி.எஸ்.டி., முதன்மை கமிஷனர் எம்.வி.எஸ்.சவுத்ரி துவங்கி வைத்து பார்வையிட்டார்.அவர் கூறியதாவது:சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஜி.எஸ்.டி., அலுவலகமும், காதியும் இணைந்து, விற்பனை கண்காட்சியை அமைத்துள்ளது. இரண்டு நாள் நடைபெறும் கண்காட்சியில், கிராம பெண்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன.ஊரக மக்களை ஊக்கப்படுத்தவும், காதி பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்க்கவும், ஜி.எஸ்.டி., இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.

தள்ளுபடி விலையில் அனைத்து பொருட்களும் விற்கப்படுகின்றன.தமிழகத்தில், போலி விற்பனை ரசீது வாயிலாக நடைபெறும் வரி ஏய்ப்பை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சமீப காலத்தில், வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து மக்கள் மற்றும் வணிகர்களிடம், போலி விற்பனை ரசீது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.கண்காட்சியில், பருப்பு வகைகள், கதர் ஆடைகள், வீட்டு உபயோக பொருட்கள், பட்டு சேலைகள் என, பலவித பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. நிகழ்ச்சியில், சென்னை தெற்கு ஜி.எஸ்.டி., கமிஷனர் சுதா கோகா, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக தலைவர் ஹன்ஸ்ராஜ் வர்மா, எல்காட் நிர்வாக இயக்குனர் யாதவ், சென்னை தெற்கு ஜி.எஸ்.டி., இணை கமிஷனர் ஜெயப்பிரியா உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X