பொது செய்தி

தமிழ்நாடு

நடிகர் அஜித் வீடு முன் பெண் தற்கொலை முயற்சி

Added : அக் 05, 2021
Share
Advertisement
சென்னை : வேலை இழந்த சோகத்தில், நடிகர் அஜித் வீடு முன் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை, போலீசார் தடுத்து நிறுத்தினர்.சென்னை, சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்தவர் பர்ஜானா, 28; தேனம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், ஒருங்கிணைப்பாளராக பணி புரிந்தார். கடந்த ஆண்டு, நடிகர் அஜித், அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, அவருடன் செல்பி மற்றும் 'வீடியோ' எடுத்த பர்ஜானா, அதை
 நடிகர் அஜித் வீடு முன் பெண் தற்கொலை முயற்சி

சென்னை : வேலை இழந்த சோகத்தில், நடிகர் அஜித் வீடு முன் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை, போலீசார் தடுத்து நிறுத்தினர்.

சென்னை, சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்தவர் பர்ஜானா, 28; தேனம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், ஒருங்கிணைப்பாளராக பணி புரிந்தார். கடந்த ஆண்டு, நடிகர் அஜித், அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, அவருடன் செல்பி மற்றும் 'வீடியோ' எடுத்த பர்ஜானா, அதை சமூக வலைதளங்கங்களில் பகிர்ந்து வைரல் ஆக்கினார். இதையடுத்து, அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். அஜித் தரப்பு கூறியதை அடுத்து, பர்ஜானாவுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டது.பயில் கவனம் செலுத்தாததால், மீண்டும்பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இதனால் மனமுடைந்த அவர், ஏப்ரலில் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், நடிகர் அஜித் தலையிட்டு, மீண்டும் வேலை வாங்கித்தர வேண்டும் எனக் கோரி, நேற்று மாலை, ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித் வீடு முன், பர்ஜானா உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றார். போலீசார் அவரை தடுத்து, காவல் நிலையம் அழைத்து சென்று விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X