பொது செய்தி

தமிழ்நாடு

ஐ.சி.எப்., வளாக மரங்கள் ஏலத்தில் 220 டன் விற்பனை

Added : அக் 05, 2021
Share
Advertisement
சென்னை : ஐ.சி.எப்., வளாகத்தில் சேகரிக்கப்பட்டுள்ள, 220 டன் மரங்கள் பொது ஏலத்தில் விற்பனை செய்யப்பட உள்ளன.சென்னையில் உள்ள ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலையான ஐ.சி.எப்.,பில், கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு காலனிகளில் ஊழியர்கள் வசிக்கின்றனர்.இந்த வளாகத்திலும், அங்குள்ள ஏரிக்கரையிலும், தோட்டக்கலை பிரிவால், சுற்றுச்சூழல் காக்கவும், நிழலுக்காகவும், மறு உபயோகத்திற்கும்

சென்னை : ஐ.சி.எப்., வளாகத்தில் சேகரிக்கப்பட்டுள்ள, 220 டன் மரங்கள் பொது ஏலத்தில் விற்பனை செய்யப்பட உள்ளன.சென்னையில் உள்ள ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலையான ஐ.சி.எப்.,பில், கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு காலனிகளில் ஊழியர்கள் வசிக்கின்றனர்

.இந்த வளாகத்திலும், அங்குள்ள ஏரிக்கரையிலும், தோட்டக்கலை பிரிவால், சுற்றுச்சூழல் காக்கவும், நிழலுக்காகவும், மறு உபயோகத்திற்கும் பயன்படும் வகையில் மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. நிழல் தரும் மரங்களுடன், முற்றிய பிறகு தொழிற்சாலை பயன்பாட்டுக்கு பயன்படும் வகையிலும், மரங்கள் உள்ளன.அலுவலகம் மற்றும் தொழிற்சாலை வளாகங்களில், முறிந்து விழுந்த மரங்கள், சாலைகள் மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கு இடையூறாக இருந்து அப்புறப்படுத்தப்பட்ட மரங்கள், வளர்ந்து சாயும் நிலையில் இருந்த மரங்கள் வெட்டப்பட்டு, அங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த மரங்களை பொது ஏலத்தில் விற்க ஐ.சி.எப்., முடிவு செய்துள்ளது. அந்த வகையில், 220 டன் மரங்கள் விற்பனை செய்யப்பட உள்ளதாக, வியாபாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X