பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி அமைப்பு பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க சி.எம்.டி.ஏ., திட்டம்

Added : அக் 05, 2021
Share
Advertisement
சென்னை : கட்டட அனுமதி, விதிமுறைகள் குறித்து அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பயிற்சி அளிக்க சி.எம்.டி.ஏ., திட்டமிட்டுள்ளது.சென்னை பெருநகரில், 2008 வளர்ச்சி விதிகளின் படி அனுமதி வாங்கிய கட்டடங்களில் விரிவாக்கம் செய்ய, பொது கட்டட விதிகளின் அடிப்படையிலேயே அனுமதி பெற வேண்டும்.ஆனால், 2008 விதிப்படி அனுமதி வாங்கியவர்கள், விதிகளை மீறி கட்டிய பகுதிகளை, பொது கட்டட விதிகளை

சென்னை : கட்டட அனுமதி, விதிமுறைகள் குறித்து அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பயிற்சி அளிக்க சி.எம்.டி.ஏ., திட்டமிட்டுள்ளது.

சென்னை பெருநகரில், 2008 வளர்ச்சி விதிகளின் படி அனுமதி வாங்கிய கட்டடங்களில் விரிவாக்கம் செய்ய, பொது கட்டட விதிகளின் அடிப்படையிலேயே அனுமதி பெற வேண்டும்.ஆனால், 2008 விதிப்படி அனுமதி வாங்கியவர்கள், விதிகளை மீறி கட்டிய பகுதிகளை, பொது கட்டட விதிகளை சுட்டிக்காட்டி தப்பிக்க முயற்சிக்கின்றனர்.உள்ளாட்சி அமைப்புகளில் சிறிய குடியிருப்பு கட்டடங்களில் இது போன்ற பிரச்னைகள் இருப்பதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக சி.எம்.டி.ஏ., அளித்த பதில்:பழைய விதிப்படி கட்டப்பட்ட கட்டடங்களில் எவ்வித விதி மீறலும் இல்லாத நிலையில் தான், பொது கட்டட விதிப்படி விரிவாக்கம் செய்ய அனுமதி பெற முடியும். விதிமீறல் உள்ள கட்டடங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.பழைய விதிமுறைகளுக்கும், புதிய பொது கட்டட விதிகளுக்கு இடையிலான வேறுபாடு, கட்டட விதிமுறைகளை அமல்படுத்துவது குறித்து, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள அலுவலர்கள், பணியாளர்களுக்கு சி.எம்.டி.ஏ., சார்பில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து கட்டுமான துறையினர் கூறியதாவது:உள்ளாட்சி அமைப்புகளில் உள்ளவர்களுக்கு பயிற்சி அளிப்பது நல்ல முடிவு தான். இருப்பினும், தற்போது, பொறியாளர், நகரமைப்பு வல்லுனர்கள் போன்றோர், தொழில்முறை வல்லுனர்களாக சி.எம்.டி.ஏ.,விலும், உள்ளாட்சி அமைப்புகளிலும் பதிவு செய்கின்றனர்.

இவ்வாறு பதிவு செய்த தொழில்முறை வல்லுனர்களை, சில நிபந்தனைகள் அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகள் பயன்படுத்தி, கட்டட அனுமதி கோப்புகளை முடிக்கலாம்.பட்டா வழங்கும் பணியில், நில அளவை துறை உரிமம் மற்றும் பயிற்சி அளித்து, ஒப்பந்த அடிப்படையில் பொறியாளர்களை பயன்படுத்துகிறது. இந்த அடிப்படையில், உள்ளாட்சி அமைப்புகள் செயல்படலாம். இதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய அனுமதியை வழங்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X