சம்பவம் செய்தி

தமிழ்நாடு

1.225 கிலோ கஞ்சா; சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டது

Added : அக் 05, 2021
Share
Advertisement
சென்னை : வெளிநாட்டு தபால் பார்சலில் வந்த, யோகா மசாஜ் பந்து மற்றும் வெஜிடபிள் சாலட் மிக்சருக்குள் மறைத்து கொண்டு வரப்பட்ட, 1.225 கிலோ கஞ்சாவை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.டில்லியைச் சேர்ந்த நபர் ஒருவர், சென்னையிலிருந்து அமெரிக்காவிற்கு, தபால் பார்சல் வாயிலாக நான்கு பார்சல்கள் அனுப்ப பதிவு செய்துள்ளார். சந்தேகத்திற்குரிய வகையிலான அந்த பார்சலை,

சென்னை : வெளிநாட்டு தபால் பார்சலில் வந்த, யோகா மசாஜ் பந்து மற்றும் வெஜிடபிள் சாலட் மிக்சருக்குள் மறைத்து கொண்டு வரப்பட்ட, 1.225 கிலோ கஞ்சாவை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

டில்லியைச் சேர்ந்த நபர் ஒருவர், சென்னையிலிருந்து அமெரிக்காவிற்கு, தபால் பார்சல் வாயிலாக நான்கு பார்சல்கள் அனுப்ப பதிவு செய்துள்ளார். சந்தேகத்திற்குரிய வகையிலான அந்த பார்சலை, சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், 4,790 டிராமாடோல் ஹைட்ரோகுளோரைடு என்ற போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதே போல, அமெரிக்காவிற்கு அனுப்ப இருந்த, மேலும் இரண்டு பார்சல்களையும், சந்தேகத்தின் அடிப்படையில், சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.அதிலும், 3,200 டிராமாடோல் மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இந்த மாத்திரைகளை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளின் அனுமதி இல்லாமல் ஏற்றுமதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.

எனவே, அமெரிக்காவிற்கு பார்சலில் அனுப்ப இருந்த, 7,990 டிராமாடோல் மாத்திரைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.அமெரிக்கா மற்றும் கனடாவிலிருந்து சென்னைக்கு, இரண்டு தபால் பார்சல்கள் வந்தன. சந்தேகத்திற்குரிய வகையில் இருந்த பார்சல்களை, சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், யோகா மசாஜ் மற்றும் வெஜிடபிள் சாலட் மிக்ஸர் இருந்தன.அவற்றை சோதித்ததில், கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்து கணக்கிட்டதில், 1 கிலோ 225 கிராம் கஞ்சா இருந்தது. அவற்றையும் பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X