சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நெடுஞ்சாலை துறை அலட்சியம் விபத்தில் சிக்கும் மாணவியர்

Added : அக் 05, 2021
Share
Advertisement
அண்ணாசாலை : சுரங்கநடைபாதைக்கு நெடுஞ்சாலை துறையினர் பூட்டு போட்டுள்ளதால், வேறு வழியின்றி சாலை மையத்தடுப்பை ஏறி குதித்து செல்லும் மாணவியர், விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது.தீவுத்திடல் - -சைதாப்பேட்டை வரையிலான, 13 கி.மீ., நீளமுள்ள அண்ணா சாலையை, நெடுஞ்சாலை துறையினர் பராமரித்து வருகின்றனர்.சென்னையில் பிரதானமாக உள்ள இச்சாலையில், சாலையின் ஒரு புறத்திலிருந்து மற்றொரு

அண்ணாசாலை : சுரங்கநடைபாதைக்கு நெடுஞ்சாலை துறையினர் பூட்டு போட்டுள்ளதால், வேறு வழியின்றி சாலை மையத்தடுப்பை ஏறி குதித்து செல்லும் மாணவியர், விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது.

தீவுத்திடல் - -சைதாப்பேட்டை வரையிலான, 13 கி.மீ., நீளமுள்ள அண்ணா சாலையை, நெடுஞ்சாலை துறையினர் பராமரித்து வருகின்றனர்.சென்னையில் பிரதானமாக உள்ள இச்சாலையில், சாலையின் ஒரு புறத்திலிருந்து மற்றொரு புறத்திற்கு, பாதசாரிகள் கடப்பதற்கு, ஏழு இடங்களில் சுரங்கநடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.குற்றச்சம்பவம் ஏதும் நிகழாமல் இருக்க, சுரங்க நடைபாதைகள் இரவு நேரத்தில் பூட்டப்பட்டு, காலை மீண்டும் திறப்பது வழக்கம். ஆனால், அண்ணாசாலை எல்.ஐ.சி., அருகே உள்ள சுரங்க நடைபாதை, பயன்படுத்தப்படாத நிலையில் நாள் முழுவதும் பூட்டப்பட்டு உள்ளது.

அவற்றை திறக்க பலமுறை வலியுறுத்தியும், நெடுஞ்சாலை துறையினர் கண்டு கொள்ளவில்லை. இதனால் அருகே உள்ள காயிதே மில்லத் கல்லுாரி மாணவியர் மட்டுமின்றி, மின்வாரிய ஊழியர்கள், தனியார் வணிக நிறுவன ஊழியர்கள் என, ஆயிரக்கணக்கானோர் மிகுந்த சிரமத்துடன் சாலை தடுப்பை ஏறி குதித்து செல்கின்றனர்.அவ்வாறு செல்லும் போது, சில சமயங்களில், வேகமாக செல்லும் வாகனம் மோதி, மாணவியர் படுகாயமடைந்து வருகின்றனர்.எனவே இது போன்ற விபத்துக்களில் உயிரிழப்பு ஏற்படும் முன், சுரங்க நடைபாதையை திறக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X