சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மொபைல் போன் பறித்தவர் கைது

Added : அக் 05, 2021
Share
Advertisement
எழும்பூர் : முதியவரிடம் மொபைல் போன் பறித்து, தப்ப முயன்ற வாலிபரை, பொதுமக்கள் மடக்கி பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர்.புதுப்பேட்டை, ஜமால் மொய்தீன் தெருவைச் சேர்ந்தவர் சையது இப்ராஹீம், 62. நேற்று முன்தினம் இரவு, புதுப்பேட்டை ஆதித்தனார் சாலை வழியாக நடந்து சென்றார்.அப்போது, அவரது கையிலிருந்த மொபைல் போனை பறித்த வாலிபர், அருகே நிறுத்தி வைத்திருந்த அவரது வாகனத்தில் ஏறி தப்ப

எழும்பூர் : முதியவரிடம் மொபைல் போன் பறித்து, தப்ப முயன்ற வாலிபரை, பொதுமக்கள் மடக்கி பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர்.

புதுப்பேட்டை, ஜமால் மொய்தீன் தெருவைச் சேர்ந்தவர் சையது இப்ராஹீம், 62. நேற்று முன்தினம் இரவு, புதுப்பேட்டை ஆதித்தனார் சாலை வழியாக நடந்து சென்றார்.அப்போது, அவரது கையிலிருந்த மொபைல் போனை பறித்த வாலிபர், அருகே நிறுத்தி வைத்திருந்த அவரது வாகனத்தில் ஏறி தப்ப முயன்றார்.

இதை பார்த்த அப்பகுதி மக்கள், அவரை மடக்கி பிடித்து, எழும்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.விசாரணையில், மொபைல்போன் பறிப்பில் ஈடுபட்டவர் திருவல்லிக்கேணி, லாயிட்ஸ் சாலையைச் சேர்ந்த ரகுபதி, 23 என்பது தெரியவந்தது. நேற்று அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து, மொபைல் போன், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட ரகுபதி மீது, எழும்பூர், சூளைமேடு, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X