பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.250 இழப்பீடு வழங்க மின் வாரியத்துக்கு உத்தரவு

Added : அக் 05, 2021
Share
Advertisement
சென்னை : மனு மீது எடுத்த நடவடிக்கை குறித்து பதில் அளிக்காததற்காக, பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு, 250 ரூபாய் இழப்பீடு வழங்க, மின் வாரியத்துக்கு, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரைச் சேர்ந்த சத்தியா என்பவர், மின் இணைப்பு வேண்டி செலுத்தப்பட்ட தொகை திரும்ப கிடைக்கவும், காலம் தாழ்த்தியதற்காக ஏற்பட்ட மன உளைச்சலுக்கு

சென்னை : மனு மீது எடுத்த நடவடிக்கை குறித்து பதில் அளிக்காததற்காக, பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு, 250 ரூபாய் இழப்பீடு வழங்க, மின் வாரியத்துக்கு, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரைச் சேர்ந்த சத்தியா என்பவர், மின் இணைப்பு வேண்டி செலுத்தப்பட்ட தொகை திரும்ப கிடைக்கவும், காலம் தாழ்த்தியதற்காக ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 5,000 ரூபாய் வழங்கவும், மின் குறை தீர்ப்பாளரிடம் மேல்முறையீட்டு மனு செய்துள்ளார்.அதற்கு, எதிர் மனுதாரரான மின் வாரியம் தரப்பில் பதில் மனு அளிக்கப்பட்டுள்ளது.இரு தரப்பு வாதங்களையும் விசாரித்த பின், குறை தீர்ப்பாளர் விடுத்த உத்தரவு:மின் இணைப்பு வேண்டி சமர்ப்பித்து ரத்தான விண்ணப்பத்திற்கு, உரிய தொகையை, தன் பெயரில் இருக்கும் மின் இணைப்பு எண்ணில் வரவு வைக்க, மேல்முறையீட்டாளர், 2020 செப்., 28ல் சமர்ப்பித்த கடிதம், 2021 ஏப்., 29ல் செயற்பொறியாளரிடம் இருந்து மேற்பார்வை பொறியாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் இருந்து, வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்கள் கேட்டு, 2021 ஜூலையில் திருப்பி அனுப்பப்பட்டு உள்ளது. மின் குறைதீர் மன்றத்தில் முறையிட்டு, குறை தீர்ப்பாளரிடம் முறையீடு செய்யும் வரை தொகை திரும்ப வழங்கவில்லை.ஆணை கிடைக்கப்பெற்ற நாளில் இருந்து, 30 நாட்களுக்குள் தொகையை மேல்முறையீட்டாளரின் மின் இணைப்பு எண்ணில் வரவு வைக்குமாறு தீர்வு செய்கிறேன். மனுவின் மீது எடுத்த நடவடிக்கை குறித்து பதில் அளிக்காததற்கு, அதிகபட்ச இழப்பீடாக, 250 ரூபாய் எதிர்மனுதாரர், மேல்முறையீட்டாளருக்கு வழங்க வேண்டும்.இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X