சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பேச்சை கேட்காத மனைவி கணவன் துாக்கிட்டு தற்கொலை

Added : அக் 05, 2021
Share
Advertisement
மதுரவாயல் : கணவனின் பேச்சை கேட்காமல், மனைவி தன் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றதால், விரக்தியடைந்தவர் துாக்கிட்டு தற்கொலை செய்தார்.மதுரவாயல், சக்கரபாணி நகர் 14வது தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர், 31. இவர், பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறார். இவரது மனைவி ரம்யா.தம்பதிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. நேற்று

மதுரவாயல் : கணவனின் பேச்சை கேட்காமல், மனைவி தன் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றதால், விரக்தியடைந்தவர் துாக்கிட்டு தற்கொலை செய்தார்.

மதுரவாயல், சக்கரபாணி நகர் 14வது தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர், 31. இவர், பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறார். இவரது மனைவி ரம்யா.தம்பதிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. நேற்று முன்தினம் ரம்யா, அரக்கோணத்தில் உள்ள உறவினரின் வீட்டு நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் என, கணவரிடம் கேட்டுள்ளார்.அதற்கு, சந்திரசேகர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஆனால், கணவரின் பேச்சை கேட்காத ரம்யா, உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு, குழந்தைகளையும் அழைத்து அரக்கோணம் சென்றார்.இதனால் விரக்தியடைந்த சந்திரசேகர், நேற்று முன்தினம் இரவு மது போதையில் வீட்டிலேயே இருந்துள்ளார். இரவு நீண்ட நேரமாகியும் வெளியே வராததால், சந்தேகமடைந்து அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக பார்த்தபோது, சந்திரசேகர் துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.தகவல் அறிந்து வந்த மதுரவாயல் போலீசார், உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X