கும்மிருட்டில் கத்திவாக்கம் மேம்பாலம் மின் விளக்குகளை சீரமைக்க கோரிக்கை

Added : அக் 05, 2021
Share
Advertisement
எண்ணுார் : வழிப்பறி திருடர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் வகையில், கத்திவாக்கம் மேம்பாலத்தின் கீழ் மின் விளக்குகள் எரியாமல், கும்மிருட்டாக உள்ளது.சென்னை எண்ணுர், கத்திவாக்கம் மேம்பாலமானது எர்ணாவூர், எண்ணுார், பர்மா நகர் ஆகிய மூன்று பகுதிகளை இணைக்கும் வகையில், மூன்று வழி மேம்பாலமாக உள்ளது.இந்நிலையில், மேம்பாலத்தின் கீழ் பக்கவாட்டில் உள்ள அணுகு சாலையில், மின்

எண்ணுார் : வழிப்பறி திருடர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் வகையில், கத்திவாக்கம் மேம்பாலத்தின் கீழ் மின் விளக்குகள் எரியாமல், கும்மிருட்டாக உள்ளது.சென்னை எண்ணுர், கத்திவாக்கம் மேம்பாலமானது எர்ணாவூர், எண்ணுார், பர்மா நகர் ஆகிய மூன்று பகுதிகளை இணைக்கும் வகையில், மூன்று வழி மேம்பாலமாக உள்ளது.

இந்நிலையில், மேம்பாலத்தின் கீழ் பக்கவாட்டில் உள்ள அணுகு சாலையில், மின் விளக்குகள் ஏதும் எரியாமல் கும்மிருட்டாக உள்ளது. இங்கு எண்ணுார் அனல் மின் நிலையம், அனல் மின் நிலைய குடியிருப்பு, தபால் நிலையம், வங்கி, கோவில்கள் உள்ளன.தவிர, கத்திவாக்கம் ரயில் நிலையத்திற்குச் செல்ல, மேம்பாலத்தின் கீழ் உள்ள சாலையே பிரதானம். இந்நிலையில், மேம்பாலத்தின் கீழ் ஒரு மின் விளக்குகள் கூட எரிய வில்லை.இதனால், அச்சாலை முழுதுமே கும்மிருட்டாக உள்ளது. இதனால், ரயில் நிலையம் செல்வோர், அனல் மின் நிலைய குடியிருப்பு மக்கள் கடும் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.காரணம், ஏற்கனவே குறிப்பிட்ட பகுதியில், அடிக்கடி வழிப்பறி நடப்பது வாடிக்கையாகி உள்ளது.

மேலும், எர்ணாவூர் கேட் பகுதியில் இருந்து கத்திவாக்கம் மேம்பாலம் வரையிலான சாலையிலும், மின் விளக்குகள் எரிவதில்லை.எனவே, உடனடியாக மின் விளக்குகளை பராமரிக்கும் மாநகராட்சி மின் பிரிவு அதிகாரிகள், அனைத்து சாலை மின் விளக்குகளையும் பழுது பார்த்து ஒளிரச் செய்ய வேண்டும்.தவிர, இவற்றை தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X