சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீட்டின் பூட்டை உடைத்து நகை, கார் திருட்டு நெடுஞ்சாலையில் விரட்டி பிடித்த போலீஸ்

Added : அக் 05, 2021
Share
Advertisement
பீர்க்கன்காரணை, : வீட்டின் பூட்டை உடைத்து, நகைகள் மற்றும் கார் திருடியவரை, பீர்க்கன்காரணை போலீசார் கைது செய்தனர்.தாம்பரம் அடுத்த முடிச்சூர், தெற்கு லட்சுமி நகர், 3வது பிரதான சாலையை சேர்ந்தவர் கருப்பையா, 62; கார் ஓட்டுனர். இவரது தம்பி கோவிந்தன் கடந்த மாதம் 27ம் தேதி இறந்ததால், குடும்பத்துடன் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சென்றார்.அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை
 வீட்டின் பூட்டை உடைத்து நகை, கார் திருட்டு நெடுஞ்சாலையில் விரட்டி பிடித்த போலீஸ்

பீர்க்கன்காரணை, : வீட்டின் பூட்டை உடைத்து, நகைகள் மற்றும் கார் திருடியவரை, பீர்க்கன்காரணை போலீசார் கைது செய்தனர்.

தாம்பரம் அடுத்த முடிச்சூர், தெற்கு லட்சுமி நகர், 3வது பிரதான சாலையை சேர்ந்தவர் கருப்பையா, 62; கார் ஓட்டுனர். இவரது தம்பி கோவிந்தன் கடந்த மாதம் 27ம் தேதி இறந்ததால், குடும்பத்துடன் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சென்றார்.அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அக்கம் பக்கத்தினர், போலீசில் புகார் அளித்தனர். போலீசார் ஆய்வு செய்ததில், பீரோவில் இருந்த, 6 சவரன் நகைகள், இரண்டு வெள்ளி குத்து விளக்குகள் மற்றும் உண்டியலில் இருந்த, 50 ஆயிரம் ரூபாய் ஆகியவை திருடப்பட்டிருந்தன.

பீர்க்கன்காரணை போலீசார் விசாரித்த நிலையில், அக்.,1ம் தேதி மதியம் திருடப்பட்ட கார் சென்னை - - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மதுராந்தகம் அருகே, சுங்கச்சாவடியை கடந்து செல்வதாக, காரில் இருந்த 'பாஸ்டேக்' வாயிலாக கருப்பையாவின் மொபைல்போன் எண்ணுக்கு, தகவல் கிடைத்தது.கார் சுங்கச்சாவடியை கடந்து அரை மணிநேரத்திற்கு பின், தகவல் வந்ததால் பீர்க்கன்காரணை குற்றப்பிரிவு எஸ்.ஐ., விழுப்புரம் போக்குவரத்து போலீசாருக்கு தகவல் அளித்தார்.போலீசார், தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புகளை அமைத்திருந்த நிலையில், அவற்றை, இடித்துவிட்டு கார் நிற்காமல் சென்றது. தொடர்ந்து, திருச்சி, இ.புதுார் போலீசார், திருச்சி சுங்கச்சாவடி அருகே, நெடுஞ்சாலையின் குறுக்கே, லாரியை நிறுத்தினர்.இதை கண்ட, காரில் வந்த நபர் காரை நிறுத்தி தப்பியோட முயன்றார். அவரை, திருச்சி போலீசார் பிடித்து, பீர்க்கன்காரணை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.போலீசார் விசாரணையில் அவர், படப்பையைச் சேர்ந்த வினோத்குமார், 19 என, தெரிந்தது. விசாரணை அனைத்தும், முடிந்த நிலையில், நேற்று மாலை, வினோத்குமாரை போலீசார், கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X