பொது செய்தி

தமிழ்நாடு

தலைமை காவலர் பணியிட மாற்றம் ஏன்?

Added : அக் 05, 2021
Share
Advertisement
வளசரவாக்கம் : வளசரவாக்கம் காவல் நிலைய தலைமை காவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.சென்னை, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணி புரிந்து வருபவர் வெங்கடேசன். கடந்த, 2016ல் கே.கே.நகர் காவல் நிலைய நுண்ணறிவு பிரிவு காவலராக பணி செய்த போது, பல்வேறு குற்றச்சாட்டுகள் எழவே, ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். அங்கிருந்து, சைதாப்பேட்டை குற்றப்பிரிவிற்கு மாற்றம் பெற்றவர்,

வளசரவாக்கம் : வளசரவாக்கம் காவல் நிலைய தலைமை காவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

சென்னை, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணி புரிந்து வருபவர் வெங்கடேசன். கடந்த, 2016ல் கே.கே.நகர் காவல் நிலைய நுண்ணறிவு பிரிவு காவலராக பணி செய்த போது, பல்வேறு குற்றச்சாட்டுகள் எழவே, ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். அங்கிருந்து, சைதாப்பேட்டை குற்றப்பிரிவிற்கு மாற்றம் பெற்றவர், சமீபத்தில், வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு மாறுதலானார். தற்போது இவர் மீது பல்வேறு புகார்கள் எழவே, எம்.ஜி.ஆர்., நகர் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.செப்., 23ம் தேதி, காவல் நிலைய பணியில் இருந்த, 34 வயது பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால், இவரை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்ததாகவும், அது குறித்து குழு விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X