ஆவடியில் கஞ்சா விற்பனை

Added : அக் 05, 2021
Share
Advertisement
--நமது நிருபர்-சென்னையின் புறநகர் பகுதியான ஆவடியில், கஞ்சா விற்பனை குறையாததால், சமூக ஆர்வலர்கள் அதிருப்தியில் உள்ளனர்.சென்னையில் கடந்தாண்டு 'டிரைவ் அகெய்ன்ஸ்ட் ட்ரக்' என்ற பெயரில் திட்டமிட்டு, கஞ்சா வியாபாரிகளை போலீசார் கைது செய்தனர். இதனால், சென்னையின் மையப் பகுதியில் கஞ்சா விற்பனை குறைந்தது. ஆனால், சென்னை புறநகர் பகுதியான ஆவடியில், கஞ்சா விற்பனை

--நமது நிருபர்-
சென்னையின் புறநகர் பகுதியான ஆவடியில், கஞ்சா விற்பனை குறையாததால், சமூக ஆர்வலர்கள் அதிருப்தியில் உள்ளனர்.சென்னையில் கடந்தாண்டு 'டிரைவ் அகெய்ன்ஸ்ட் ட்ரக்' என்ற பெயரில் திட்டமிட்டு, கஞ்சா வியாபாரிகளை போலீசார் கைது செய்தனர். இதனால், சென்னையின் மையப் பகுதியில் கஞ்சா விற்பனை குறைந்தது. ஆனால், சென்னை புறநகர் பகுதியான ஆவடியில், கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது.

ஆவடி டேங்க் பேக்டரி காவல் எல்லையில், இளைஞர்களின் கைகளில் கஞ்சா தாராளமாக புரளுகிறது.இதுகுறித்து புகார் அளித்தால், சம்பந்தப்பட்ட கஞ்சா வியாபாரிகளுக்கே தகவல் சென்று விடுகிறது. இதனால், புகார் அளிக்க பொதுமக்கள் முன்வருவதில்லை.கோவில்பதாகை, வெள்ளானுார் ஆகிய பகுதிகளில், கஞ்சா புழக்கம் அதிகரித்திருக்கிறது. இந்த பகுதிகளில் 100 கிராம் கஞ்சா, 150 ரூபாய்க்கு விற்ற நிலையில், தற்போது 200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரையில் விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது.போலீசாரின் தீவிர கண்காணிப்பு மற்றும் நடவடிக்கை இல்லாததால், ஆவடியில் கஞ்சா விற்பனை தாராளமாக நடப்பதாக கூறப்படுகிறது.

போலீசாரும் இதை கண்டுகொள்ளாததால், ஆவடி சுற்றுவட்டார பகுதிகளில், சிறுவர்களும் கஞ்சாவிற்கு அடிமையாகி உள்ளனர்.'கூகுள் பே'வில் பணப்பரிமாற்றம்கஞ்சா வியாபாரிகள் 'வாட்ஸ் ஆப்'பில் தொடர்பு கொண்டு, 'கூகுள் பே'வில் பணத்தைப் பெற்று வியாபாரம் செய்வதாக, கூறப்படுகிறது. இதனால், கஞ்சா வியாபாரிகளை சைபர் கிரைம் பிரிவு போலீசார் உதவியுடன் பிடிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X