உலகம் சுற்றும் கேரள தம்பதி ரஷ்ய பயணத்துக்கு தயார்!| Dinamalar

பொது செய்தி

இந்தியா

உலகம் சுற்றும் கேரள தம்பதி ரஷ்ய பயணத்துக்கு தயார்!

Updated : அக் 05, 2021 | Added : அக் 05, 2021 | கருத்துகள் (4)
Share
கொச்சி-உலகைச் சுற்றி வரவேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ள கேரளாவைச் சேர்ந்த தம்பதி, 26வது நாடாக ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர்.கேரளாவின் கொச்சியைச் சேர்ந்த, கே.ஆர். விஜயன், 71, மற்றும் அவரது மனைவி மோகனா, 69, ஆகியோர் டீக்கடை நடத்தி வருகின்றனர்.உலகைச் சுற்றி வர வேண்டும் என்ற ஆசையில், பல நாடுகளுக்கு அவர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். கடந்த 2007ல் தங்கள் முதல் வெளிநாட்டுப்

கொச்சி-உலகைச் சுற்றி வரவேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ள கேரளாவைச் சேர்ந்த தம்பதி, 26வது நாடாக ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர்.



latest tamil news


கேரளாவின் கொச்சியைச் சேர்ந்த, கே.ஆர். விஜயன், 71, மற்றும் அவரது மனைவி மோகனா, 69, ஆகியோர் டீக்கடை நடத்தி வருகின்றனர்.உலகைச் சுற்றி வர வேண்டும் என்ற ஆசையில், பல நாடுகளுக்கு அவர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். கடந்த 2007ல் தங்கள் முதல் வெளிநாட்டுப் பயணமாக இஸ்ரேலுக்கு சென்றனர்.

அதன் பின் பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்திரியா, எகிப்து, அமெரிக்கா என 25 நாடுகளுக்கு இதுவரை பயணம் மேற்கொண்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல நாடுகள் வெளிநாட்டு பயணியருக்கு தடை விதித்துள்ளன.


latest tamil news


அதனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக பயணம் மேற்கொள்ளாமல் இருந்த அவர்கள், வரும் 21ம் தேதி, 26வது நாடாக ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர்.டீக்கடை நடத்தி அதில் வரும் வருமானத்தில் ஒரு பகுதியை சேமித்தும், கடன் வாங்கியும், இந்த தம்பதி உலகம் சுற்றி வருகின்றனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X