பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களுக்கு பாராட்டு விழா

Added : அக் 05, 2021
Share
Advertisement
புவனகிரி : சர்வதேச அளவிலான சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு புவனகிரியில் பாராட்டு விழா நடந்தது.உலக விளையாட்டு ஒருங்கிணைப்பு குழுமம் மற்றும் உலக யூனியன் சிலம்ப அறக்கட்டளை சார்பில் சர்வதேச அளவிலான இணையதள வழி சிலம்ப போட்டி லண்டனில் நடந்தது. கடலுார் மாவட்டத்தில், புவனகிரி ராஜேந்திரா சிலம்ப பள்ளி மாணவர்கள் 20 பேர் மற்றும்


புவனகிரி : சர்வதேச அளவிலான சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு புவனகிரியில் பாராட்டு விழா நடந்தது.உலக விளையாட்டு ஒருங்கிணைப்பு குழுமம் மற்றும் உலக யூனியன் சிலம்ப அறக்கட்டளை சார்பில் சர்வதேச அளவிலான இணையதள வழி சிலம்ப போட்டி லண்டனில் நடந்தது.

கடலுார் மாவட்டத்தில், புவனகிரி ராஜேந்திரா சிலம்ப பள்ளி மாணவர்கள் 20 பேர் மற்றும் பயிற்சியாளர்கள் இருவர் பங்கேற்றனர்.இதில் பயிற்சியாளர்கள் காளீஸ்வரன், விக்னேஸ்வரனுக்கு மூவேந்தர் விருது வழங்கப்பட்டது. மாணவர்கள் ஸ்ரீஜா, கல்கி மற்றும் ராம்குமார் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். இதற்கான பாராட்டு விழா நேற்று புவனகிரியில் நடந்தது. சிதம்பரம் சமூக பாதுகாப்பு தாசில்தார் சத்தியன் தலைமை தாங்கினார். ரகு வசந்தன் வரவேற்றார். தலைமையாசிரியர் அழகப்பன், நம்ம புவனகிரி இயக்கம் நிறுவனர் இலியாஸ் பாஷா முன்னிலை வகித்தனர். பகுத்தறிவு மேம்பாட்டு இயக்கத் தலைவர் பேரறிவாளன், அழகப்பன், பயிற்சி ஆசிரியர் சுப்பிரமணியன் ஆகியோர் வெற்றி பெற்றவர்களை பாராட்டி நினைவு பரிசு வழங்கினார். சூர்யா நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X