பொது செய்தி

தமிழ்நாடு

அரசு கல்லூரியில் வரும் 8ம் தேதி இறுதி கட்ட கலந்தாய்வு

Added : அக் 05, 2021
Share
Advertisement
காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுரியில் இளங்கலை படிப்பு மாணவர் சேர்க்கை இறுதி கட்ட கலந்தாய்வு வரும் 8ம் தேதி நடக்கிறது.இது குறித்து அரசு கல்லுாரி (பொறுப்பு) முதல்வர் தென்னரசு விடுத்துள்ள செய்திக் குறிப்பு: காட்டுமன்னார்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 2021 - 22-ம் ஆண்டிற்கான இளங்கலை மாணவர்கள் சேர்க்கை முதல்

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுரியில் இளங்கலை படிப்பு மாணவர் சேர்க்கை இறுதி கட்ட கலந்தாய்வு வரும் 8ம் தேதி நடக்கிறது.

இது குறித்து அரசு கல்லுாரி (பொறுப்பு) முதல்வர் தென்னரசு விடுத்துள்ள செய்திக் குறிப்பு: காட்டுமன்னார்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 2021 - 22-ம் ஆண்டிற்கான இளங்கலை மாணவர்கள் சேர்க்கை முதல் கலந்தாய்வு ஆகஸ்ட் 23ம் தேதி, இரண்டாம் கட்ட கலந்தாய்வு செப்.,8ம் தேதி நடந்தது. கல்லுாரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கு நேற்று (4ம் தேதி) நேரடி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளது. கல்லுாரியில் கணிதம், கணினி அறிவியல், வணிகவியல், தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடப் பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப, மூன்றாவது இறுதி கட்ட கலந்தாய்வு வரும் 8ம் தேதி நடக்கிறது. கல்லுாரியில் சேர விண்ணப்பித்த மாணவ, மாணவிகள் கலந்துக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X