பொது செய்தி

தமிழ்நாடு

தாயுள்ளம் கொண்டவர் ஸ்டாலின்: அமைச்சர் மஸ்தான்

Added : அக் 05, 2021
Share
Advertisement
செஞ்சி : 'மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுவதில் முதல்வர் ஸ்டாலின் தாயுள்ளத்துடன் நடந்து கொள்கிறார்' என அமைச்சர் மஸ்தான் பேசினார்.செஞ்சி ஒன்றியம் சோ.குப்பம், பாக்கம், தடாகம் உள்ளிட்ட கிராமங்களில் தி.மு.க., சார்பில் நடந்த கூட்டத்தில் அமைச்சர் மஸ்தான் பேசியதாவது:முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற 4 மாதத்தில் தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறார்.

செஞ்சி : 'மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுவதில் முதல்வர் ஸ்டாலின் தாயுள்ளத்துடன் நடந்து கொள்கிறார்' என அமைச்சர் மஸ்தான் பேசினார்.

செஞ்சி ஒன்றியம் சோ.குப்பம், பாக்கம், தடாகம் உள்ளிட்ட கிராமங்களில் தி.மு.க., சார்பில் நடந்த கூட்டத்தில் அமைச்சர் மஸ்தான் பேசியதாவது:முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற 4 மாதத்தில் தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறார். மூன்று மாதத்தில் விவசாயிகளுக்காக ஒரு லட்சம் மின் இணைப்புகளை வழங்கி விட்டார்.தமிழக மக்களுக்கான திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தாயுள்ளத்துடன் நிறைவேற்றி வருகிறார். கிராமங்களில் அடிப்படை தேவைகள் நிறைவடைந்து, அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய தி.மு.க., கூட்டணிக்கு தொடர்ந்து ஆதரவு தர வேண்டும்' என்றார்.முன்னாள் எம்.எல்.ஏ., செந்தமிழ்ச்செல்வன், ஒன்றிய செயலாளர்கள் விஜயகுமார், விஜயராகவன், வழக்கறிஞர் மணிவண்ணன், தகவல் தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் முக்தியார்அலி பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X