கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தியேட்டர்களில் குடிநீர், கழிப்பறை வசதி திடீர் சோதனை மேற்கொள்ள உத்தரவு

Updated : அக் 05, 2021 | Added : அக் 05, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
சென்னை-தியேட்டர்களில் குடிநீர், கழிப்பறை வசதிகள் உள்ளதா என்பதை உறுதி செய்ய, அவ்வப்போது திடீர் சோதனைகளை மேற்கொள்ள, அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னையைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் தாக்கல் செய்த மனு:தியேட்டர்களுக்குள் குடிநீர், உணவு பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிப்பதில்லை; அங்கே விற்கப்படும் குளிர்பானங்கள், உணவு பொருட்கள்,

சென்னை-தியேட்டர்களில் குடிநீர், கழிப்பறை வசதிகள் உள்ளதா என்பதை உறுதி செய்ய, அவ்வப்போது திடீர் சோதனைகளை மேற்கொள்ள, அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



latest tamil news


சென்னையைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் தாக்கல் செய்த மனு:தியேட்டர்களுக்குள் குடிநீர், உணவு பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிப்பதில்லை; அங்கே விற்கப்படும் குளிர்பானங்கள், உணவு பொருட்கள், குடிநீரைத் தான் வாங்க வேண்டும். அரை லிட்டர் தண்ணீர் பாட்டில் 30 ரூபாய்; குளிர்பானங்கள் எல்லாம் குறைந்தது 65 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன.நிர்ணயிக்கப்பட்ட சந்தை விலையை விட, அதிக விலைக்கு உணவு பொருட்கள், குளிர்பானங்கள் விற்பதற்கு தடை விதிக்க வேண்டும். தியேட்டர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு:பாதுகாப்பு காரணங்களுக்காக, தியேட்டர்களுக்குள் தண்ணீர் எடுத்துச் செல்ல பார்வையாளர்களுக்கு தடை விதித்தால், சுத்தமான குடிநீரை வழங்க, நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். அவ்வாறு வழங்கவில்லை என்றால், சேவை குறைபாட்டுக்காக தியேட்டர் நிர்வாகங்கள் இழப்பீடு வழங்க வேண்டும்.தமிழகம் முழுதும் உள்ள தியேட்டர்களில், அவ்வப்போது திடீர் சோதனைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.


latest tamil news


பொது தளங்களில், தியேட்டர்களில் நடக்கும் முறைகேடுகள் தொடர்பாக புகார்கள் வருகின்றன. புகார்களின் உண்மைத்தன்மை குறித்து, திடீர் ஆய்வுகளை அதிகாரிகள் மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.எனவே, தியேட்டர்களில் சுத்தமான குடிநீர் வசதி உள்ளதா; கழிப்பறை வசதி உள்ளதா என்பதை உறுதி செய்ய, அடிக்கடி ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். பொதுமக்கள் அளிக்கும் புகார்களை விசாரித்து, நடவடிக்கை எடுப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழன் - madurai,இந்தியா
05-அக்-202114:55:54 IST Report Abuse
தமிழன் கோர்டுல தீர்ப்பு சொல்லிருக்காங்களாம்பா. புல்லரிக்குது.
Rate this:
Cancel
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
05-அக்-202114:06:06 IST Report Abuse
M S RAGHUNATHAN Your honour கொஞ்சம் அரசுப் பள்ளிகளிலும் இந்த ஆய்வை மேற்கொள்ள வேண்டும்.
Rate this:
Cancel
Kumari Thamilan - Nagercoil,இந்தியா
05-அக்-202113:39:41 IST Report Abuse
Kumari Thamilan இருபது ரூபாய் தண்ணீர் பாட்டில் எழுபது ரூபாய். குடிப்பதற்கு தண்ணீர் எடுத்து செல்ல அனுமதியில்லை. இதுதான் சென்னை தியேட்டர்களின் இன்றய நிலை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X