பொது செய்தி

தமிழ்நாடு

கல்லுாரி வகுப்புகள் தொடக்கம்

Added : அக் 05, 2021
Share
Advertisement
கடலுார் : கல்லுாரி முதலாண்டு வகுப்புகள் நேற்று துவங்கியதையடுத்து, கடலுார் மாவட்டத்தில் மாணவ மாணவியர் உற்சாகத்துடன் கல்லுாரிக்கு வந்தனர்.கொரோனா இரண்டாவது அலை அச்சுறுத்தலால், தமிழகத்தில் கல்லுாரிகள் கடந்த ஏப்ரல் மாதம் மூடப்பட்டு, ஆன்லைனில் பாடம் நடத்தப்பட்டு வந்தது. தற்போது, கொரோனா பரவல் குறைய தொடங்கியதால், கடந்த மாதம் முதல் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள்
 கல்லுாரி வகுப்புகள் தொடக்கம்

கடலுார் : கல்லுாரி முதலாண்டு வகுப்புகள் நேற்று துவங்கியதையடுத்து, கடலுார் மாவட்டத்தில் மாணவ மாணவியர் உற்சாகத்துடன் கல்லுாரிக்கு வந்தனர்.கொரோனா இரண்டாவது அலை அச்சுறுத்தலால், தமிழகத்தில் கல்லுாரிகள் கடந்த ஏப்ரல் மாதம் மூடப்பட்டு, ஆன்லைனில் பாடம் நடத்தப்பட்டு வந்தது.

தற்போது, கொரோனா பரவல் குறைய தொடங்கியதால், கடந்த மாதம் முதல் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் துவங்கியது.இந்நிலையில், 2021-22ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை முடிந்து, நேற்று முதல் முதலாண்டு வகுப்புகள் தொடங்கப்படும் என, கல்லுாரி கல்வி இயக்ககம் அறிவித்தது. கடலுார் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் முதலாண்டு நேரடி வகுப்புகள் துவங்கியது. மாணவ மாணவியர் உற்சாகத்துடன் கல்லுாரிகளுக்கு சென்றனர். நுழைவு வாயிலில் மாணவர்களுக்கு உடல்வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்டது. மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வகுப்புகளில் அமர்ந்து படித்தனர். வகுப்பறையில் 20 மாணவர்கள் மட்டுமே அமர வைத்து பாடம் நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X